GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் கூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது | 14-Oct-2016 19:37

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்றிரவு அல்லது நாளை காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணு உலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செப்டம்பர் 6ம் தேதி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் இணைந்தது 'ஐயோ' | 14-Oct-2016 19:30

உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ஐயோ என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது. ஆங்கில அகராதியில் தலை சிறந்ததாக விளங்குகிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி.

இதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழிகளை நேரடியாக ஆய்வு செய்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய வார்த்தைகளை இந்த அகராதியில் இணைத்து வருகின்றனர்.

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம் | 14-Oct-2016 19:17

போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அண்டோனியோ குட்டெரெஸ் (67), ஐ.நா.சபையின் பொதுச் செயலராக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். ஐ.நா. சபையின் பொதுச் செயலரான பான்-கீ-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1-ஆம் தேதி ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக குட்டெரெஸ் பதவியேற்பார்.முன்னதாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 நாடுகள், பொதுச் செயலர் பதவிக்கு குட்டெரெஸை ஒரு மனதாக தேர்வு செய்து, 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபைக்கு அவரது பெயரை கடந்த வாரம் பரிந்துரைத்தது. அதன்படி, குட்டெரெஸை பொதுச் செயலராக நியமிக்க 193 நாடுகளும் வியாழக்கிழமை இசைவு தெரிவித்தன.இதன்மூலம், அந்தப் பதவிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் பிரதமராக கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை குட்டெரெஸ் பதவி வகித்தார். அதன்பிறகு, 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அகதிகளுக்கான ஐ.நா. தூதராக அவர் சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு | 14-Oct-2016 19:15

அமெரிக்க பாடலாசிரியர் பாப் டிலனுக்கு இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

இதில், தத்துவம், அரசியல், சமூகம் சார்ந்த பாடல்களை எழுதியுள்ள பாப் டிலன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க கவிதை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப், கிராம்மி விருதுகளைப் பெற்றுள்ள பாப் டிலன், நாட்டுப் புற பாடர், ஓவியர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.

தாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார் | 14-Oct-2016 19:13

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (88) வியாழக்கிழமை காலமானார். சக்ரி அரச வம்சத்தில் 9-ஆவது மன்னரான அவர் ஒன்பதாவது ராமா என்றும் அறியப்பட்டார். உலகில் மிக நீண்ட காலம் மன்னராட்சிபுரிந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவராக அவர் திகழ்ந்தார். மன்னராக இருந்த அவரது சகோதரர் 1946-இல் காலமானதைத் தொடர்ந்து, பூமிபால் அதுல்யதேஜ் அரியணையேறி, 70 ஆண்டு காலம் அனைத்துத் தரப்பினரும் போற்றும் மன்னராகத் திகழ்ந்தார்.உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை அவர் காலமானார். அரசரைக் கடவுளுக்கு நிகராகக் கருதும் தாய்லாந்தில் அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வெளியே கடந்த சில நாட்களாக ஏராளமான பொதுமக்கள் கூடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வந்தனர்.அவர் காலமானதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மஹா வஜ்ரலாங்கரணுக்கு (64) முடிசூட்டப்படும் என்று பிரதமர் பிரயுத் சன்-ஒசா கூறினார்.

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு | 14-Oct-2016 19:11

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வியாழக்கிழமை வெளியேறியது. அந்நாட்டின் மீது அபராதம் விதிப்பதாக காமன்வெல்த் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மாலத்தீவு அரசு இந்த முடிவு எடுத்தது. மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது கடந்த 2012-ஆண்டு பதவி விலகியதை அடுத்து, அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும், நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் காமன்வெல்த் அமைப்பு குற்றம் சாட்டி வந்தது.இந்நிலையில், கடந்த மாதம் கூடிய காமன்வெல்த் கூட்டமைப்பின் செயற்குழு, மாலத்தீவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டியது. மேலும், தங்கள் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவை இடைநீக்கம் செய்யப்போவதாக காமன்வெல்த் எச்சரிக்கை விடுத்திருதது.இந்நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக மாலத்தீவு வியாழக்கிழமை அறிவித்தது. இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:முகமது நஷீத் பதவி விலகிய பிறகு, அரசமைப்புச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், அரசுக்கு எதிராக காமன்வெல்த் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க முயன்றது. மேலும், மாலத்தீவுக்கு காமன்வெல்த் நடவடிக்கைக் குழு அபராதம் விதிக்க முயன்றதை ஏற்றுக்கொள்ளவே மடியாது.எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கடினமான முடிவை மேற்கொள்ள நேரிட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்