GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் இந்தியாவில் சார்க் மாநாடு | 21-Sep-2016 14:38

சார்க் நாடுகளின் தலைசிறந்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணர்கள் கலந்து கொள்ளும் இரண்டு நாள் மாநாடு இந்தியாவில் நாளை துவங்க உள்ளது. உளவுத்துறை இயக்குனர் தினேஷ்வர் சர்மா மற்றும் சார்க் நாடுகளின் உளவுத்துறை தலைவர்கள் இணைந்து செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்துகின்றனர்.

காஷ்மீரின் யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் இந்த மாநாட்டை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு உளவுத்துறை இயக்குனர் அப்தாப் சுல்தான் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சார்க் நாடுகளின் பலத்தை அதிகரிப்பதற்காகவே இந்த சார்க் மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களை கண்காணிப்பது போன்ற விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

யூரி தாக்குதலுக்கு பிறகு உலக அரங்கில் பாக்.,ஐ தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில், இந்தியாவில் நடக்கும் சார்க் மாநாட்டை பாக்., புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் பணியாற்ற சிறந்த மாநிலம் : 9வது இடத்தில் தமிழகம் | 21-Sep-2016 14:35

பெண்கள் பணியாற்ற சிறந்த டாப் 10 மாநிலங்களில் சிக்கிம் முதலிடத்திலும், தமிழகம் 9வது இடத்திலும் உள்ளன. தலைநகர் டில்லி டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. 

பெண்கள் பணியாற்ற சிறந்த இந்திய மாநிலங்கள் பற்றிய ஆய்வை சிஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தியது. இதில் அதிகபட்சமாக சிக்கிம் மாநிலம் 40 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக டில்லி 8.5 புள்ளிகளையும் பெற்றுள்ளன. பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்கு நேரம் தொடர்பான சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகள், ஐடி துறை, பிற துறைகள், பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், பணி செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம் - 40 புள்ளிகள், தெலுங்கானா - 28.5 புள்ளிகள், புதுச்சேரி - 25.6 புள்ளிகள், கர்நாடகா - 24.7 புள்ளிகள், இமாச்சல பிரதேசம் - 24.2 புள்ளிகள், ஆந்திரா - 24 புள்ளிகள், கேரளா - 22.2 புள்ளிகள், மகாராஷ்டிரா - 21.4 புள்ளிகள், தமிழகம் - 21.1 புள்ளிகள், சட்டீஸ்கர் - 21.1 புள்ளிகள் பெற்றுள்ளன. இவற்றில் சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் கோர்ட் உத்தரவுப்படி தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள், எந்த துறையிலும் இரவு நேர பணி செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. பணிகளில் பெண்களுக்கு பங்களிக்கும் நாடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 24 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு வேலையில் பங்களிப்பு அளிக்கப்படுகிறது.

மாறுகிறது நிதியாண்டு வரையறை | 21-Sep-2016 14:33

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனி மேல் ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியன இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அதே சமயம் ரயில்வே துறை சுயமாக செயல்படும் உரிமம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். திட்டம் மற்றும் திட்டமிடப்படாத சீர்திருத்தங்களுக்கான அறிவிப்புக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட் ஒன்றாக இணைக்கப்படும்.

ஓய்வுபெற்ற சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான ஓய்வூதியத்தை உயர்த்தவும், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான தற்போதைய நிதியாண்டு வரையறை மாற்றி அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதியாண்டு வரையறை மாற்றம் தொடர்பாக பொருளாதார ஆலோசகருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு 2016ம் ஆண்டு சுதந்திர தினம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும். ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியையும் 20 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நிதியாண்டு மாற்றத்திற்கு ஆலோசனை கூற முன்னாள் பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது  என்றார்.

அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் 3 வங்கி தலைவர்கள் | 18-Sep-2016 21:02

அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் வங்கித் தலைவர்கள் அருந்ததி பட்டாச்சார்யா, சாந்தா கொச்சார், ஷிகா சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவுக்கு வெளியே சர்வதேச அளவில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது.

இதில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இரண்டாம் இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மண்டலத்தில் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் பிஓடிஏஎன் குழுமத் தலைவர் பான்கோ சடென்டர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மொத்தம் 19 நாடுகளில் உள்ள பெரும் பெண் தலைவர்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச்செயல் அதிகாரியான சாந்தா கொச்சார் 5-வது இடத்திலும் ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான ஷிகா சர்மா 19-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அருந்ததி பட்டாச்சார்யாவின் திறன் மேம்பட்டுள்ளது என்று பார்ச்சூன் சுட்டிக் காட்டியுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜனுக்கு அடுத்து இவர் நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் பெருமளவு எழுந்தன.

கடந்த மே மாதத்தில் துணை வங்கிகளை இணைக்கும் முடிவை வெளியிட்டு அதை நிறைவேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். வங்கிகள் இணைக்கப்பட்டால் ஆசிய அளவில் மிகப் பெரிய வங்கி களில் ஒன்றாக எஸ்பிஐ திகழும்.

இவரது பதவிக்காலம் அக்டோபர் மாதத்தில் முடிவடைய உள்ளது. இருப்பினும் இவருக்கு பதவி நீட்டிப்பை அரசு அளிக்கும் என எதிர்பார்ப்பதாக பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியை முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த தொலை நோக்கு சிந்தனையோடு செயல்படுகிறார் சாந்தா கொச்சார் என்று பார்ச்சூன் புகழாரம் சூட்டியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமைப் பொறுப்பில் உள்ள கொச்சார், வங்கியின் வருமானத்தை அதிகரிக்கவும், கடனை வசூலிப்பதிலும் முனைப்பு காட்டி வருவதாக அது தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விரைவான வளர்ச்சியை எட்டிவரும் தனியார் வங்கிகளில் ஒன்றாக ஆக்சிஸ் வங்கி திகழ்கிறது. கடந்த நிதி ஆண்டில் வங்கியின் வருமானம் 790 கோடி டாலராக உயரவும்,1,800 நகரங்களில் 3,000 கிளைகளோடு வங்கி விரிவடையவும் இவரது பங்களிப்பு அபரிமிதமானது என்று பார்ச்சூன் குறிப்பிட்டுள்ளது.

தொலைத் தொடர்பு சேவை வர்த்தகத்தில் இணைகிறது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனங்கள் | 18-Sep-2016 21:00 தொலைத் தொடர்பு சேவைத்துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன. இதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது.  இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும். இந்த நடவடிக்கையினால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20,000 கோடி குறையும் அதேவேளையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் ரூ.4000 கோடி குறையும்.  இந்த இணைப்பினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 4-வது பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் உருவாகிறது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரைசைக் கையகத்தில் 448 மெகா ஹெட்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த இணைந்த நிறுவனங்கள். இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65,000 கோடி, நிகர மதிப்பு ரூ.35,000 கோடியாக இருக்கும். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பதஞ்சலி பால்கிருஷ்ணா | 18-Sep-2016 20:58

இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹருன் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா இடம் பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களான பஜாஜ் ஆட்டோ நிறுவனத் தலைவர் ராகுல் பஜாஜ், மாரிகோ தலைவர் ஹரிஷ் மரிவாலா, பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் அஜய் பிரமல் ஆகியோரை விட இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ஆச்சார்யா பால் கிருஷ்ணா.

இவரின் சொத்து மதிப்பு ரூ.25,600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இவர் 26-ம் இடத்தில் இருக்கிறார்.

2007-ம் ஆண்டு சிறிய மருந்தகமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது முன்னணி எப்எம்சிஜி நிறுவனமாக பதஞ்சலி இருக்கிறது. கடந்த வருடம் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.5,000 கோடியை தொட்டது. எப்எம்சிஜி பிரிவில் இருக்கும் இமாமி, டாபர் மற்றும் மாரிகோ ஆகிய நிறுவனங்களின் வருமானத்தை இவரது நிறுவனம் தாண்டிவிட்டது. நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1.63 லட்சம் கோடி ஆகும். அவரைத் தொடர்ந்து சன் பார்மாவின் திலிப் சாங்வி, பலோன்ஜி மிஸ்திரி ஆகியோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்