GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் கவுரவமிக்க விருது | 18-Sep-2016 20:36

இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 5 லட்சம் டாலர் பரிசுத்தொகை கொண்ட அமெரிக்காவின் கவுரவ மிக்க லெமல்சன் எம்ஐடி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாசிக்கில் பிறந்த ரமேஷ் ரஷ்கர் (46), அமெரிக்காவில் உள்ள எம்ஐடி மீடியா லேப்பில் கேமரா கலாச்சார ஆய்வு குழுவை நிறுவி நடத்திவருகிறார். இவர் உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ரஷ்கரின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்டும் வகையில் 5 லட்சம் டாலர் பரிசுத் தொகை கொண்ட (இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 34 லட்சத்து 39,975) அமெரிக்காவின் கவுரவமிக்க லெமல்சன் எம்ஐடி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருது நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்டெபானி கவுச் கூறும்போது, ‘‘கண்டுபிடிப்பாளர், கல்வியாளர், மாற்றத்தை ஏற்படுத்துபவர் என ரஷ்கர் பன்முக திறன் கொண்ட மனிதராக மிளர்கிறார். உலகம் முழு வதும் நேர்மறையான மாற்றங்களை விதைக்கும் நடவடிக்கையிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்’’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

விருது மூலம் கிடைக்கும் இந்தப் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை, பல்வேறு நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்குவதற்காக புதிய அமைப்பைத் தொடங்கப்போவதாக ரமேஷ் ரஷ்கர் தெரிவித்துள்ளார்.

மூடியிருக்கும் புத்தகத்தைத் திறக்காமலேயே அதைப் படிக்க உதவும் புதிய தொழில்நுட்பத்தை யும் விநாடிக்கு ஒரு டிரில்லியன் பிரேம்களைப் படம்பிடிக்கும் அதிநவீன கேமராவையும் ரஷ்கர் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் டிவி நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா | 18-Sep-2016 20:33

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் இந்தியாவின் பிரியங்கா சோப்ராவும் இடப்பெற்றுள்ளார்.

\"குவாண்டிகோ\" என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்காவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாது இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடப்பெற்றுள்ள முதல் நடிகையும் பிரியங்காதான்.

\'குவாண்டிகோ\" டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்கா பெற்ற வருமானம் 1கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் சோபியா வெர்கரா முதல் இடம் பிடித்துள்ளார். அவரது வருமானம் 4.4கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து வருகிறார் சோபியா.

இதற்கு முன்னர் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் விளம்பர படங்கள் மூலம் அதிகம் வருமானம் பெறுபவர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி அமெரிக்கருக்கு விருது | 18-Sep-2016 20:29

இந்திய வம்சாவளி மருத்துவர்-எழுத்தாளர் ஆப்ரஹாம் வர்கீஸுக்கு 2015-ம் ஆண்டுக்கான தேசிய மனிதநேய பதக்கத்தை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வரும் 21-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வர்கீஸ் மற்றும் 11 பேருக்கு இவ்விருதை வழங்குவார்.

மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக வர்கீஸுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரஹாம்வர்கீஸ் (61), தற்போது ஸ்டான்ட் போர்டு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் மருந்துகள் துறையின் துணைத்தலைவராகவும் உள்ளார். இவர் தனது மருத்துவக் கல்வியை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.

“நோயாளிகள்தான் மருத்துவ உலகின் மையம் என்பதை வர்கீஸ் நமக்கு நினைவுபடுத்தியுள்ளார்” என வெள்ளைமாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய மனிதநேய பதக்கம் வரலாறு, இலக்கியம், மொழி, தத்துவம், இதர மனிதநேய பணிகளில் ஈடுபடும் தனிமனிதர்கள், குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.

சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம் | 18-Sep-2016 20:26

சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக்கூடம் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011 செப்டம்பரில் தியன்கோங்-1 என்ற விண்வெளி ஆய்வுக்கூடத்தை சீனா விண்ணில் செலுத்தியது. அந்த ஆய்வு கூடத்தில் 2012 ஜூன், 2013 ஜூனில் சீன விண்வெளி வீரர்கள் 8 நாட்கள் மற்றும் 12 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பூமிக்கு திரும்பினர். அதன் ஆயுட்காலம் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அது அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தியன்கோங்-2 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜியுகுவான் விண்வெளி மையத்தில் இருந்து ‘மார்ச் 2எப்’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்வெளி ஆய்வுக் கூடம் பூமியில் இருந்து 393 கி.மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுக் கூடத்துக்கு வரும் அக்டோபரில் 2 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் தியான்கோங்-2 ஆய்வு கூடத்தில் 30 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப ஏதுவாக புதிய விண்கலத்தை அந்த நாடு ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளது. ‘மார்ச் 7’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம் கடந்த ஜூனில் ஆட்கள் இல்லாமல் விண்வெளி சென்றுவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. அதில்தான் சீன விண்வெளி வீரர்கள் தியன்கோங் 2 ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட உள்ளனர். அடுத்த கட்டமாக வரும் 2022-ம் ஆண்டில் விண்வெளியில் நிரந்தர ஆய்வுக் கூடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை | 18-Sep-2016 20:23

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த கழிவறையை காண்பதற்காகதற் போது அருங்காட்சியகத்தில் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.

நியூயார்க் நகரில் ககன்ஹேம் அருங்காட்சியகம் உள்ளது. இதன் நான்காவது மாடியில் உள்ள பொது கழிவறையில், வழக்கமான கழிவறை நீக்கப்பட்டு 18 கேரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட கழிவறை சில மாதங்களுக்கு முன் நிறுவப்பட்டது. இத்தாலிய கலைஞர் மவுரிசியோ கேட்டலன் பணியில் இருந்து ஓய்வு பெறும் முன் தனது இறுதி படைப்பாக இதனை உருவாக்கியிருந்தார். கழிவறை நிர்மாணிக்கப்பட்டதும் அதனை பார்வையிடுவதற்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழலில் இந்த கழிவறையை பொதுபயன்பாட்டுக்கும் அருங்காட்சியகம் திறந்துவிட்டுள்ளது. இதனால் அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

கழிவறை கதவுக்கு வெளியே பாதுகாவலர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதை பயன்படுத்துபவர் யாரேனும் தங்கத்தை சேதப்படுத்தி எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார்களா என்பதை அவர் கவனித்துக் கொள்கிறார்.

ஐ.நா. நல்லெண்ண தூதர் | 18-Sep-2016 20:20

ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான, ஐநாவின் நல்லெண்ணத் தூதராக, இராக்கைச் சேர்ந்த இளம்பெண் நாடியா முராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராக்கின் வடக்குப் பகுதியில் சிஞ்சார் நகருக்கு அருகே உள்ள கிராமத்தின் யசீதி இனத் தைச் சேர்ந்த நாடியா முராத் பாஸீ தாஹா (23), 2014-ம் ஆண்டு இராக்கில் ஐஎஸ் தீவிர வாதிகளால் பாலியல் அடிமையாக கடத்தப்பட்டு, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானவர். இவருடன் சேர்த்து கடத்தப் பட்ட ஏராளமான சிறுவர்களை, தீவிரவாதிகள் இவரின் கண் முன்னாலேயே சுட்டுக்கொன்று ரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய்துள்ளனர். தீவிரவாத கும்பலால் பல முறை பாலியல் அடிமையாக விலை பேசி விற்கப்பட்டுள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத பலவிதமான கொடுமைகளை அனுபவித்து, உயிர் தப்பி வந்திருக்கும் இவரை, ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்லெண்ணத் தூதராக ஐநாவின் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் நியமித்துள்ளது.

தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அஞ்சி அடங்கிவிடாமல், அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு, தன்னைப் போன்று பாலியல் அடிமைகளாக சிக்கியவர்களை மீட்க, துணிச்சலுடன் போராட முன்வந்ததால், அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டதாக, ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார். தீவிரவாதிகளின் கோரப்பிடியில் சிக்கி உயிர் தப்பிய ஒருவருக்கு ஐநாவில் இதுபோன்ற பதவி வழங்கப்படுவது இதுவே முதல்முறை. யசீதி இனப் படுகொலைக்கு எதிராகவும் நாடியா முராத் போராடி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரின் பெயர் பரிசீலிக்கப்படுகிறது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்