GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்தக் கூடாது | 18-Sep-2016 20:16

ஆதார் அட்டை தகவல்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும், அந்தத் தகவல் களை தவறாகப்பயன்படுத்தக் கூடாது என்று ஆதார் சட்டத்தில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நேற்றுமுன் தினம் அரசாணையாக வெளியிடப்பட்டன. கடந்த மார்ச் 16-ம் தேதி ஆதார் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இதைத் தொடர்ந்து மார்ச் 26-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆதார் சட்ட விதிகளை மீறுவோருக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் விதிகள் உள்ளன. எனினும் ஆதார் அட்டை திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். ஆதார் அட்டைக்காக பெறப்பட்ட தகவல்கள் வேறு அமைப்புகளுக்கு கைமாறும் வாய்ப்புள்ளது. தனிநபர்களின் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வரும் ஆபத்துள்ளது என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்தக் குறைகளைப் போக்கும் ஆதார் சட்டத்தில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டு நேற்றுமுன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அரசு, தனியார் அமைப்புகள் பொதுமக்களின் ஆதார் தகவல்களைப் பெறும்போது சம்பந்தப்பட்ட நபர்களின் ஒப்புதலை கண்டிப்பாகப் பெற வேண்டும். அந்த தகவல்கள் எதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளன என்பது குறித்து அட்டைதாரரிடம் விளக்கம் அளிக்க வேண்டும். வேறு எந்த பணிக்கும் அந்த தகவல்களைப் பயன்படுத்தக்கூடாது என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.

‘ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பது, பொது மக்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றின் அடிப்படையில் புதிய விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் மையம் தொடங்கப்படும்’ என்று ஒருங்கிணைந்த அடையாள திட்ட ஆணைய (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை நிர்வாக அதிகாரி அஜய்பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டுக்கான ஜப்பானின் புகுவோகா விருதை பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்! | 18-Sep-2016 20:03 பிரபல இந்திய திரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பானின் 2016ம் ஆண்டுக்கான புகுவோகா விருது வழங்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் யோகோபோடியா அமைப்பு 1990ம் ஆண்டு முதல் ஆசிய கலாசாரத்தை உருவாக்குபவர்கள் அல்லது பாதுகாப்பவர்களுக்கு கிராண்ட், அகாடமிக், கலை மற்றும் கலாசாரம் என்ற 3 பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. இசைத்துறையில் செய்த சேவையை பாராட்டி, 2016ம் ஆண்டிற்கான புகுவோகா  விருது கிராண்ட் பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. அகாடமிக் பிரிப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அமீத் அக்கம்போவுக்கு வழங்கப்பட்டது. கலை மற்றும் கலாசார பிரிவில் பாகிஸ்தானை சேர்ந்த கட்டிட கலை  நிபுணர் யாஸ்மின் லாரிக்கு வழங்கப்பட்டது. சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர், பரத நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபார், இசைக் கலைஞர் அஜ்மத் அலி கான், சமூக மற்றும் கலாசாரத்துறையில் ஆசிஸ் நந்தி, அரசியல் அறிவியல், வரலாற்று துறை அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் வந்தன ஷிவா, ஓவியக்கலைஞர் நளினி மாலினி,  வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திரா குகா ஆகியோர் ஏற்கெனவே இந்த விருதை பெற்றுள்ளனர். சீனாவில் உருவானது உலகில் மிகப்பெரிய தொலைநோக்கி | 18-Sep-2016 20:01 சீனாவில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. சீனாவில் கியூஹோ (Guizhou) பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு உலகிலேயே  மிக பெரிய தொலைநோக்கி உருவாக்கும் பணிகள் தொடங்கியது. பாஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 1.6 கிலோ மீட்டர் சுற்றளவுடன் 2500 உலோக மேற்பரப்பு  தளங்களால் ஆனது. மேலும் இந்த தளமானது 30 கால்பந்து மைதானத்திற்கு இணையானது. அதிநவீன தொழில்நுப்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கியை கொண்டு 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிக்கனல்களை எளிதாக பெற முடியும் என கூறப்படுகிறது.  இந்திய மதிப்பில் 1,213 ரூபாய் கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி தற்போது செயல்பட்டுக்கு தயாராக உள்ளது. அண்ட பெரு வெடிப்பு பற்றிய பல புதிய தகவல்களை இதன் மூலம் அறியலாம் என வானவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் தயாரித்து இந்தியா | 18-Sep-2016 19:48

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அதிநவீன ஏவுகணைகள் பொருத்தக்கூடிய, பிரம்மாண்ட போர்க்கப்பல் துவக்கி வைக்கப்பட்டது. உலகின் சிறந்த போர்க்கப்பல்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இதற்கு, \'மர்மகோவா\' என, பெயரிடப்பட்டுள்ளது. 

கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டப்படி, அரசால் நடத்தப்படும், எம்.டி.எல்., எனப்படும், \'மஸ்கவான் டாக் ஷிப்பில்டர்ஸ்\' நிறுவனம், அதிநவீன போர்க்கப்பல்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள, இரண்டாவது பிரம்மாண்ட போர்க்கப்பலுக்கு, \'மர்மகோவா\' என, பெயரிடப்பட்டுள்ளது. மர்மகோவா கப்பலை துவக்கி வைக்கும் விழா, மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நேற்று நடந்தது. கடற்படை தளபதி, அட்மிரல் சுனில் லன்பாவின் மனைவி ரீனா, கப்பலை துவக்கி வைத்தார். அதையடுத்து, அரபிக் கடலில், மர்மகோவா கப்பல், முதல் முறையாக செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சுனில் லன்பா பேசியதாவது: மத்திய அரசின், \'இந்தியாவில் தயாரியுங்கள்\' திட்டத்தை நனவாக்கும் வகையில், உள்நாட்டிலேயே, பிரம்மாண்ட போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் சிறந்த போர்க்கப்பல்களுடன், இந்த கப்பலை ஒப்பிடும் வகையில், அதிநவீன அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மர்மகோவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடல் பகுதியை சிறப்பான வகையில் பாதுகாக்கும். டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து, கப்பலை வடிவமைத்தது. வருங்காலத்தில், இத்தகைய போர்க்கப்பல்கள் அதிகளவில் தயாரிக்கப்படும். எம்.டி.எல்., நிறுவனம், இந்தியாவில், நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும், ஒரே நிறுவனமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார். \'ரேடார்\' மையம்:* தரையிலிருந்து, தரையில் உள்ள இலக்கையும், தரையிலிருந்து, விண்ணில் உள்ள இலக்கையும் தாக்கும் ஏவுகணைகளை, இந்த கப்பலில் பொருத்த முடியும்* இந்த கப்பலில்இருந்து பாய்ந்து செல்லும் ஏவுகணைகள், இலக்கை துல்லியமாக சென்றடைந்து தாக்கும் வகையிலானவை* இஸ்ரேல் நாட்டின், \'எம்.எப் - ஸ்டார்\' எனப்படும், அதிநவீன கண்காணிப்பு ரேடார் மையம், மர்மகோவாவில் பொருத்தப் பட்டுள்ளது * கடல் பரப்பில், 300 கி.மீ., தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கவல்ல, \'பிரம்மோஸ்\' சூப்பர்சானிக் ஏவுகணைகளும் இந்த கப்பலில் உள்ளன* நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராக தாக்குதல் நடத்தக்கூடிய, இரண்டு ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் திறனும் இந்த கப்பலுக்கு உண்டு* மர்மகோவா என்பது, கோவாவில் உள்ள பிரபலமான துறைமுகம் அமைந்துள்ள நகரத்தின் பெயர். உக்ரைன் நாட்டு இன்ஜின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல்களில், தற்போதைய தயாரிப்பான மர்மகோவா மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தவல்லது. இதை போன்று, மேலும் நான்கு போர்க்கப்பல்கள், 29 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மர்மகோவா கப்பல், 535 அடி நீளம் உடையது. மணிக்கு, 56 கி.மீ., வேகத்தில் செல்லும். இதில், உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட, நான்கு நவீன, \'காஸ் டர்பைன் இன்ஜின்\'கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பலில், 50 அதிகாரிகள், 250 மாலுமிகள் பணியாற்றுவர்.

இந்தியாவின் உயரிய விருதுகள் | 18-Sep-2016 19:45 மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள்ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதில் மிகமுக்கியமானது 4 விருதுகள் தான். நாட்டின் மிகஉயரிய விருது என்ற பெருமை பெற்றது பாரத ரத்னா. இதற்கு அடுத்து பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இதுவரை இந்த விருதுகளை எத்தனை பேர் பெற்றுள்ளனர்; எந்த மாநிலத்தில் இருந்து அதிகம் பேர் விருதுகளை பெற்றுள்ளனர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் மத்திய அரசின்www.padmaawards.gov.in என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இவ்விருதை அதிகம் பெற்றவர்கள் டில்லி. இப்பட்டியலில்தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. டாப் - 5 டில்லி - 797 மகாராஷ்டிரா - 756 தமிழகம் - 391 உ.பி., - 295 மே.வங்கம் - 263 எந்த மாநிலம் கடைசி இப்பட்டியலில் லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது. இங்கிருந்து ஒருவர் கூட விருது பெறவில்லை. கடைசி 5 இடம் புதுச்சேரி - 6 அருணாச்சல் - 5 திரிபுரா - 2 டாமன் டையூ - 1 லட்சத்தீவு - 0 பெண்கள் எத்தனை விருது பெற்ற 4,329 பேரில், 12 சதவீதம் (519 பேர்) மட்டுமே பெண்கள். எந்த நாடு அதிகம் இந்த விருதுகளை பெற்ற வெளிநாடுகளின் பட்டியலில்அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டை சேர்ந்த 100 பேருக்குஇவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்த விருது இதுவரை பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும்பத்ம ஸ்ரீ ஆகியவிருதுகளை பெற்றவர்களின் எண்ணிக்கை - 4,329 பேர் பாரத ரத்னா உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்விருதை இதுவரை 45 பேர் பெற்றுள்ளனர். கலை, இலக்கியம், சமூக சேவையில் சாதனை படைத்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது இது அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு எனமாற்றப்பட்டுள்ளது. பத்ம விபூஷண் இது இந்தியாவின் 2வது உயரிய விருது. 1954ல் உருவாக்கப்பட்டது. இதுவரை293 பேருக்குவழங்கப்பட்டுள்ளது. பத்ம பூஷன் இது இந்தியாவின் 3வது உயரிய விருது. 1954ல் உருவாக்கப்பட்டது. இதுவரை 1,225 பேர் இவ்விருதைபெற்றுள்ளனர். பத்ம ஸ்ரீ பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷன் ஆகிய விருதுகளுக்கு அடுத்து 4வது உயரிய விருது பத்ம ஸ்ரீ.இது 1954ல் உருவாக்கப்பட்டது. இதுவரை 2,766 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர். எந்த துறையினர் டாப் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கலைத் துறையினர் முதலிடத்தில் உள்ளனர். இத்துறையை சேர்ந்த 930 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர். துறை எண்ணிக்கை கலை - 930 இலக்கியம், கல்வி- 852 மருத்துவம் - 537 அறிவியல், இன்ஜினியரிங் - 492 சமூக சேவை - 419 சிவில் சர்வீஸ் - 417 பொது விவகாரம் - 227 விளையாட்டு - 211 வணிகம், தொழில் - 181 மற்றவர்கள் - 63 சீனாவில் திறக்கப்பட உள்ள உலகின் மிக உயரமான பாலம் | 13-Sep-2016 19:05

தெற்கு சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உலகின் மிக உயரமான பாலம் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலைப்பகுதிகள்  நிரம்பிய சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது குய்ஸோ மாகாணம். இங்கே இரு மலைப்பகுதிகளில் நடுவே, ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது பேய்ப்பன்ஜிங் பாலம். தரை மட்டத்தில் இருந்து 1854 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1341 மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலம்தான் தற்பொழுது உலகின் மிக உயரமான பாலமென்று கருதப்படுகிறது.

இந்த பாலத்தின் இரு முனைகளும் சனிக்கிழமையன்று இணைக்கப்பட்டன. இந்த வருட இறுதியில் போக்குவரத்திற்கு இந்தப் பாலம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் லியூபாண்சுயி மற்றும் ஸுஅன்வெய் பகுதிகளுக்கு இடையயேயான போக்குவரத்து நேரம் பாதியாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் உலகின் மிக உயரமான பாலங்களில் பெரும்பாலானவை  சீனாவில்தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
QUIZ

தற்போதைய நிகழ்வுகள்