GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் சுப்பிரமணியன் சுவாமிக்கு அமெரிக்காவில் தமிழ் ரத்னா விருது | 13-Sep-2016 19:02

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அமெரிக்க தமிழ்ச் சங்கம், \"தமிழ் ரத்னா\' என்ற விருதை வழங்கி கெüரவித்துள்ளது. தற்போது அமெரிக்கா வந்துள்ள மாநிலங்களவை எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி, ஊழலை எதிர்த்துப் போராடி வருவதற்காகவும், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மைக்காக தீவிரமாக செயலாற்றி வருவதற்காகவும் அவருக்கு \"தமிழ் ரத்னா\' விருது வழங்கி கெüரவிக்கப்பட்டுள்ளது.அவரது பங்களிப்புகளை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம். சுவாமி சுட்டிக் காட்டினார் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா ஆகியோர் ஏற்கெனவே தமிழ் ரத்னா விருதைப் பெற்றுள்ளனர்.

ரியோ பாரா ஒலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்றார் | 13-Sep-2016 18:59

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாரா ஒலிம்பிக்), தமிழக வீரர் மாரியப்பன் (21) உயரம் தாண்டுதல் பிரிவில் உலக சாம்பியனை பின்னுக்குத்தள்ளி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.மாற்றுத்திறனாளி ஆடவருக்கான (டி-42 பிரிவு) உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன், 1.89 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியனான சாம் க்ரு 1.86 மீ. உயரத்தை தாண்டி வெள்ளிப் பதக்கமும், இந்தியரான வருண் சிங்கும் அதே உயரம் தாண்டி வெண்கலமும் வென்றனர்.இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் சரத் குமார், 1.77 மீ. உயரம் தாண்டி 6-ஆவது இடத்தைப் பிடித்தார்.முன்னதாக, இந்தப் போட்டியில் பங்கேற்ற 12 வீரர்களில் 6 பேர் தங்களது முதல் 8 முயற்சிகளிலேயே 1.74 மீ. உயரம் தாண்டியதால் கடும் போட்டி நிலவியது. எனினும், தனது 10-ஆவது முயற்சியில் வெற்றிகரமாக 1.77 மீ. உயரம் தாண்டிய மாரியப்பன், இறுதியில் 1.89 மீ. உயரம் தாண்டி வெற்றி பெற்றார்.ரொக்கப் பரிசு: மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ரொக்கப் பரிசு திட்டத்தின் கீழ், ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சமும், வருண் சிங்குக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்பட உள்ளது.பதக்கம் வென்ற மாரியப்பன், வருண் சிங் ஆகியோருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுகளும்,பரிசுகளும் குவிந்தவண்ணமுள்ளன.

சம்ஸ்கிருத மொழியில் ஐ.நா. சாசனம் | 13-Sep-2016 18:53

ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்த சாசனம் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:ஐ.நா. சாசனம் தற்போது சம்ஸ்கிருத மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அரும்பாடுபட்ட ஜிதேந்திர குமார் திரிபாதிக்கு நன்றிகள் என்று சையது அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.ஜிதேந்திர குமார் திரிபாதி, லக்னெளவைச் சேர்ந்த அகில பாரதிய சம்ஸ்கிருத பரிஷதின் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரில், \"சர்வதேச அமைப்பை உருவாக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு\' கடந்த 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெற்றது. அதில், ஐ.நா. அமைப்பை உருவாக்குவதற்காக சர்வதேச நாடுகளிடையே ஏற்பட்ட ஒப்பந்தம், சாசனமாக இயற்றப்பட்டது.இந்த சாசனம் இதுவரை ஐ.நா.வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சம்ஸ்கிருதத்திலும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவக்கம் | 13-Sep-2016 18:51

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. \"சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெக்சிகோ துணைத்தூதரகம் இந்தியா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

மேலும் தென்னிந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் வியாபாரம் நிமித்தமாக மெக்சிகோ செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் உதவும்.\"என இந்தியாவிற்கான மெக்சிகோ தூதர் மெல்பா பிரியா தெரிவித்துள்ளார். 

சென்னை நீலாங்கரையில் திறக்கப்பட்டுள்ள இந்த தூதகரத்தின் மூலமாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். எனினும் இந்த தூதரகத்தில் மெக்சிகோ செல்வதற்கான விசா வழங்கப்படாது. 

மெக்சிகோ செல்ல விசா பெற விரும்புவோர் தில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகத்தை அணுக வேண்டும். மெக்சிகோ சார்பில் இந்தியாவில் அமைக்கப்படும் நான்காவது தூதரகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மலேரியா இல்லாத நாடு இலங்கை! | 13-Sep-2016 18:48

மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு இலங்கை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாலத்தீவுகளுக்குப் பிறகு இத்தகைய சிறப்பை இலங்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. கொசுக்களின் மூலம் பரவும் மலேரியா காய்ச்சல், உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. கடந்த 1970, 80-ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளில் மலேரியாவின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதன் பிறகு அந்நாட்டு அரசு மேற்கொண்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்தது. இந்த நிலையில், மலேரியா காய்ச்சல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், \"இலங்கை நாட்டின் குறிப்பிடத்தக்க சாதனை இது\' என்றார்.உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, வங்கதேசம், கொரியா உள்ளிட்ட 11 நாடுகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பாரா ஒலிம்பிக் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்வது யார்? | 13-Sep-2016 18:45

பாரா ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடியேந்திச் செல்கிறார் எனத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இத்தகவலை இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மறுத்துள்ளது.  

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து வரும் 18ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் கொடியேந்திச் செல்லும் கெளரவம் மாரியப்பனுக்கு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மறுத்துள்ளது.

இதுதொடர்பான கமிட்டியின் முடிவு, 16 அல்லது 17-ம் தேதி அன்றுதான் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இன்னும் பல போட்டிகளில் இந்தியர்கள் பங்குபெற உள்ளதால், அதன் முடிவுகளுக்கு பிறகே நிறைவு விழாவில்,  தேசியக் கொடியேந்திச் செல்வது யார் என்பது தேர்வு செய்யப்படும் என இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான மாரியப்பன் 1.89 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்