GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் சானியா, ஹிங்கிஸ் ஜோடி ஏமாற்றம் | 06-Mar-2016 23:05

தோகா: டென்னிஸ் அரங்கில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் சானியா ஜோடி வீழ்ந்தது.கத்தார் தலைநகர் தோகாவில் பெண்களுக்கான சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் வெஸ்னினா, கசட்கினா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய சானியா ஜோடி, இரண்டாவது செட்டை 4–6 என பறிகொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை–பிரேக்கரில்’ சானியா ஜோடி வழக்கத்துக்கு மாறாக சொதப்ப, 5–10 என, ரஷ்ய ஜோடி வென்றது. முடிவில் 6–2, 4–6, 5–10 என்ற கணக்கில் சானியா ஜோடி வீழ்ந்தது. கடந்த ஆண்டு (2015) இத்தொடரில் சீன தைபே வீராங்கனை சு வெய்யுடன் இணைந்து விளையாடிய சானியா, பைனலில் வீழ்ந்தார்.பின் சுவிட்சர்லாந்தின் ஹிங்கிசுடன் இணைந்தார். இவர்கள், விம்பிள்டன், யு.எஸ்.ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் தொடர் உட்பட, சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக 41 போட்டிகளில் வெற்றி பெற்றனர். கத்தார் ஓபன் தொடரில் கோட்டைவிட்டதால், இவர்களது வெற்றிநடை முடிவுக்கு வந்தது.

இந்தியா ‘ஆசிய சாம்பியன்’: வங்கதேசம் ஆட்டம் ‘குளோஸ்’ | 06-Mar-2016 22:41

மிர்புர்: ஆசிய கோப்பையை ஆறாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது இந்தியா. நேற்று நடந்த பைனலில் வங்கதேசத்தை துவம்சம் செய்தது. தவான், கோஹ்லி நல்ல ‘ஓபனிங்’ கொடுத்தனர். வழக்கம் போல கேப்டன் தோனி கச்சிதமாக ‘பினிஷிங்’ செய்ய, இந்திய ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.வங்கதேசத்தில், ஆசிய கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் நடந்தது. நேற்று, மிர்புரில் நடந்த பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின.இங்கு திடீரென புயல் மழை பெய்ததால், போட்டி 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. மழை நின்ற பின், தலா 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடந்தது.‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார், தமிம் இக்பால் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்த போது, நெஹ்ரா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த சர்கார் (14), 6வது பந்தில் அவுட்டானார். பும்ரா ‘வேகத்தில்’ தமிம் இக்பால் (13) வெளியேறினார். பாண்ட்யா வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த சாகிப் (21), அஷ்வின் ‘சுழலில்’ சிக்கினார். முஷ்பிகுர் ரஹிம் (4) ‘ரன்–அவுட்’ ஆனார். கேப்டன் மொர்டசா ‘டக்–அவுட்’ ஆனார். வங்கதேச அணி 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து  திணறியது.பின் இணைந்த சபிர் ரஹ்மான், மகமதுல்லா ஜோடி இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. பாண்ட்யாவின் 14வது ஓவரில் மகமதுல்லா 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. சபிர் ரஹ்மான் (32), மகமதுல்லா (33 ரன், 13 பந்து, 2 சிக்சர், 2 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின், நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (1) ஏமாற்றினார். பின் இணைந்த ஷிகர் தவான், விராத் கோஹ்லி ஜோடி வங்கதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. சாகிப் வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த தவான், 35 பந்தில் அரைசதத்தை எட்டினார். மறுமுனையில் அசத்திய கோஹ்லி, நாசிர் ஹொசைனின் 12வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த போது டஸ்கின் அகமது ‘வேகத்தில்’ தவான் (60) அவுட்டானார்.வழக்கத்துக்கு மாறாக 4வது வீரராக வந்த கேப்டன் தோனி, தனது ‘பினிஷிங்’ பணியை சரியாக செய்தார். அல்–அமின் ஹொசைன் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி (41 ரன், 28 பந்து, 5 பவுண்டரி), தோனி (20 ரன், 6 பந்து, 2 சிக்சர், ஒரு பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.ஆட்டநாயகன் விருதை தவான் வென்றார்.ஆசிய கோப்பை தொடரில் 4 லீக், ஒரு பைனல் என 5 போட்டியிலும் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, 100 சதவீத வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி, அடுத்து சொந்த மண்ணில் நடக்க உள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை (மார்ச் 8 – ஏப். 3) தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் | 05-Mar-2016 11:10

புதுடெல்லி  -  2016-17ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று(திங்கட் கிழமை) பாராளுமன்றத்தில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கில் எந்த மாற்றமும் இல்லை. புகையிலைப் பொருட்கள் மற்றும் காருக்கு புதிய வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அவர் 3வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய எழுந்தபோது, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.பின்னர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் அறிவிப்புகளைவெளியிட்டார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய விவரங்கள் வருமாறு,வருமானவரி விலக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது முதியோருக்கு வருமான வரி விலக்கு விலக்கு உச்சவரம்பு ரூ3லட்சமாகவும்மற்றவர்களுக்கு ரூ 2.5லட்சம்  லட்சமாகவும் உள்ளது.  குறைந்த வருவாய் பிரிவினர் பயன்பெறும் வகையில் வருமான வரிக்கழிவு ரூ2ஆயிரத்தில் இருந்து ரூ5ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  ரூ5லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு 87ஏ பிரிவின் கீழ் ரூ5ஆயிரம் வரிச்சலுகை அளிக்கப்படும். இதன் மூலம் சுமார் 1கோடி குறைந்த வருவாய் பிரிவினர் பயன்பெறுவார்கள். வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டுக்கான வரிச்சலுகை அதிகரிக்கப்படுகிறது.வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான வரிக்கழிவு சலுகை ரூ20ஆயிரத்தில் இருந்து ரூ60ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ரூ35லட்சத்துக்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ50ஆயிரம் கூடுதல்  வரிச்சலுகை வழங்கப்படும்.சிறுகுறு நிறுவனத்தின் வரிச்சலுகை உச்சவரம்பு ரூ2கோடியாக உயர்த்தப்படுகிறது.ரூ5கோடிக்கு குறைவாக வணிகம் செய்யும் நிறுவனங்களில் வரி 29சதவீதமாக குறையும். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும் வகையில் சுங்கம், கலால், வரியில் மாற்றம் செய்யப்படுகிறது. புதியதாக தொடங்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.  ஓய்வூதிய நிதியில் இருந்து 40சதவீதம் திரும்ப பெறுவோருக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.60சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு சேவை வரி விலக்கு அளிக்கப்படும். ஆண்டுக்கு ரூ1கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். அந்த வரி 12சதவீதத்தில் இருந்து 15சதவீதமாக உயருகிறது. புகையிலைப்பொருட்கள் மீதான வரி 10சதவீதத்தில் இருந்து 15சதவீதமாக உயர்த்தப்படுகிறது.இதனால் சிகரெட் விலை உயரும்.இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி 23சதவீதமாக உயர்த்தப்படுகிறது.  ரூ10லட்சத்துக்கும் மேல் கார் வாங்கினால் கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கப்படும். இதனால் கார்கள் விலை உயரும். சிறிய ரக கார்களுக்கு 1சதவீத ம் , டீசல் கார்களுக்கு 2.5சதவீதம், சொகுசு கார்களுக்கு 4சதவீதம் வரி உயர்த்தப்படும். கணக்கில் காட்டா கறுப்பு பணத்திற்கு 45சதவீதம் வரி விதிக்கப்படும். வரிஏய்ப்பு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழக்கும் திட்டம் எளிதாக்கப்படும். 11 புதிய வரி தீர்ப்பாயங்கள்கொண்டு வரப்படுகிறது. ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு 3ஆண்டுகளுக்கு மேட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வரி 1சதவீதம் குறைக்கப்படுகிறது. நடப்பாண்டில் மொத்த செலவினம் ரூ19.78லட்சம் கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ2.5லட்சம் கோடியாக இருக்கும்.புதிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25சதவீதம் வரி விதிக்கப்படும். குளிர் சாதன பொருட்கள் மீது வரி உயர்த்தப்படுகிறது. தங்கம், பிராண்ட் துணிகள் மீதான வரி உயர்கிறது. இதனால் தங்கம் , சட்டைகள் விலை உயரும். ஆண்டுக்கு ரூ50கோடிக்கு கீழ் உள்ள 13 வகை வரிகள் விலக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உசைன் போல்ட்டை வீழ்த்துவேன்: அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் சபதம் ! | 05-Mar-2016 10:47

பிரேசில் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள கோடை கால ஒலிம்பிக் போட்டியில் உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட்டை வீழத்துவேன் என்று அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் சபதம் விடுத்துள்ளார். உலகின் அதி வேக மனிதர் என்ற பெருமை பெற்றவர் பிரபல தடகள வீரர் உசேன் போல்ட். உலகிலேயே அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை அவர் பங்கேற்கும் போட்டிகளில் நிரூபித்து வருபவர்.அவரை வெற்றி பெற யாராலும் முடியாது என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கேட்லின் முயற்சித்தால் போல்ட் சாதனையை எளிதில் முறியடிக்கலாம் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனேனில் கடந்த ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற கேட்லின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நூலிழையில் உசைன் போல்டிடம் வெற்றியை பறிகொடுத்தார். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக தீவிர பயிற்சியில் ஜஸ்டின் கேட்லின் ஈடுபட்டுள்ளார். இதனிடையே பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட்டை வீழ்த்தி சாதனை படைப்பேன் என்று ஜஸ்டின் கேட்லின் சவால் விடுத்துள்ளார்.உசேன் போல்ட்டை வீழ்த்திய பின்னர் பெறும் பதக்கத்தை அணிந்து கொண்டு அமெரிக்கா முழுவதும் சுற்றி வருவேன் என்றும் ஜஸ்டின் கேட்லின் கூறியுள்ளார்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்