GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் வட்டி விகித நிர்ணயக் குழுவில் அரசு உறுப்பினர்கள் நியமனம் | 12-Oct-2016 19:17

வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்யும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவுக்கான (எம்.பி.சி.) அரசு சார்பிலான மூன்று உறுப்பினர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு புது தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் நிதிக் கொள்கை நிர்ணயக் குழுவில் மத்திய அரசின் சார்பில் மூன்று பேரை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இந்த எம்.பி.சி. குழுவில், இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சேத்தன் கதே, டெல்லி ஸ்கூல் ஆப் இக்னாமிக்ஸ் தலைவர் பமி துவா மற்றும் ஐ.ஐ.எம்.-ஆமதாபாத் பேராசிரியர் ரவீந்திர டோலாகியா ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.வட்டி விகிதங்கள் உள்ளிட்ட நிதிக் கொள்கை முடிவுகளை இதுவரை ரிசர்வ் வங்கி கவர்னர் எடுத்து வந்த நிலையில், இனி அந்தப் பணியினை நிதிக் கொள்கை நிர்ணயக் குழு மேற்கொள்ள உள்ளது. இந்தக் குழுவில், மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கி சார்பில் ஆளுநர் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் என மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்! | 12-Oct-2016 19:12

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.அதில், ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி என்றும் அவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.இவரைத்தொடர்ந்து இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் சாதனை படைத்து வரும் திலிப் சங்வி 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து ரூ.11 லட்சம் கோடி.அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியல் விவரம்: 3. இந்துஜா சகோதர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி)4. அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி)5. பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி)6. லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி)7. கோத்ராஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி)8. ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி)9. குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி)10. சைரஸ் பூனவாலா (ரூ.5.76 லட்சம் கோடி)

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 5 இந்திய வம்சாவளியினர் | 12-Oct-2016 19:08

அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.சிம்பொனி டெக்னாலஜி நிறுவனர் ரமேஷ் வாத்வானி, சின்டெல் பாரத் பணிசேவை நிறுவனர் நீரஜா தேசாய், விமான சேவைத் துறை ஜாம்பவான் ராஜேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், முதலீட்டு நிபுணர் கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகிய அமெரிக்க இந்தியர்கள், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் \"2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மிகப் பெரும் 400 பணக்காரர்கள்\' பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இவர்களில் கவிதார்க் ராம் ஸ்ரீராம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் ரமேஷ் வாத்வானி 222-ஆவது இடத்திலும், நீரஜா தேசாய் 274-ஆவது இடத்திலும் உள்ளனர்.ராஜேஷ் காங்வால், ஜான் கபூர், கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகியோர் முறையே 321, 335, 361 ஆகிய இடங்களை வகிக்கின்றனர்.மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 23-வது ஆண்டாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

சீனச் சிறையில் வாடும் பேராசிரியருக்கு சர்வதேச மனித உரிமைகள் விருது | 12-Oct-2016 19:05

சீனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பேராசிரியர் இல்ஹாம் தோதிக்கு, மனித உரிமைகளுக்கான சர்வதேச \"மார்ட்டின் என்னல்ஸ்\' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட 8 சர்வதேதச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த விருதுக்கு இல்ஹாம் தோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அவருக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆயுள் தண்டனை குறித்து உலகின் கவனத்தை மீண்டும் திருப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.46 வயதாகும் இல்ஹாம் தோதி, பெய்ஜிங்கிலுள்ள மின்ஸ பல்கலைக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். சிறுபான்மை உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், துருக்கிய முஸ்லிம் உய்கர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். ஜின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசு கடைப்பிடித்து வரும் அடக்குமுறைகளை இல்ஹாம் தோதி வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.இந்தச் சூழலில், அவர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இரண்டு நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான \"மார்ட்டின் என்னல்ஸ்\' விருதுக்கு இல்ஹாம் தோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்: ஒப்பந்தக் கோட்பாட்டை உருவாக்கிய இருவருக்கு நோபல் பரிசு | 12-Oct-2016 19:04

நிகழாண்டில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டீஷ் அமெரிக்கரான ஆலிவர் ஹார்ட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த பெங் ஹால்ம்ஸ்டிரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ஒப்பந்தங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து, அதற்குத் தீர்வளிக்கும் கோட்பாட்டை உருவாக்கியதற்காக அவர்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:உயரதிகாரிகளின் செயல்பாட்டுக்கு ஏற்ப ஊதியம் அளித்தல், காப்பீடுகளுக்கான கட்டணங்கள் மற்றும் சம்பளப் பிடித்தங்களை நிர்ணயித்தல், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, அதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.அந்தச் சிக்கல்களை மிக விரிவாக அலசி ஆராய்வதற்கான கோட்பாட்டை ஆலிவர் ஹார்ட் மற்றும் பெங் ஹால்ம்ஸ்டிரம் உருவாக்கியுள்ளனர்.அவர்கள் உருவாக்கியுள்ள கோட்பாட்டைப் பயன்படுத்தி, நடைமுறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள், ஒப்பந்த நிறுவனங்கள், ஒப்பந்தங்களுக்குள் ஒளிந்திருக்கக் கூடிய ஆபத்துகள் ஆகியவை குறித்த தெளிவான அறிவைப் பெற முடியும்.நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நொடிப்புநிலை (திவால்) தொடர்பான சட்டங்களை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கொள்கைவடிவமைப்புகளுக்கு ஆலிவர் ஹார்ட், பெங் ஹால்ம்ஸ்டிரம் ஆகியோர் உருவாக்கிய ஒப்பந்தக் கொள்கை அடித்தளமாகத் திகழும் என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுடன் வழங்கப்படும் 9.24 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி) பரிசுத் தொகை, ஆலிவர் ஹார்ட்டுக்கும், பெங் ஹால்ம்ஸ்டிரம்முக்கும் சமமாகப் பகிர்ந்து வழங்கப்படும்

ஆலிவர் ஹார்ட் (68)

பிரிட்டனில் பிறந்து, அமெரிக்காவில் வசித்து வரும் ஆலிவர் ஹார்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் பட்டமும் பெற்றவர் இவர்.

 பெங் ஹால்ம்ஸ்டிரம் (67)

ஃபின்லாந்தைச் சேர்ந்த பெங் ஹால்ம்ஸ்டிரம், மாஸசூùஸட்ஸ் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.அமெரிக்காவின் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டாண்ட்ஃபோர்டு பொருளாதாரக் கல்லூரியில் ஆய்வாளர் பட்டம் பெற்றவர் ஆவார்.

சர்வதேச பெண் குழந்தை தினம் - அக்டோபர் 11 | 12-Oct-2016 19:02

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களது திறமைகளையும், படைப்புகளையும் அங்கீகரிக்கும் விதமாகவும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012ஆம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாத்து போற்றும் வகையில் இன்று நான்காவது சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது. இது, தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிர்த்து போராடுவதற்குப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை தேவை என்பதை உணர்த்தும் வகையில் அமைகிறது.

பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்