GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு | 12-Oct-2016 18:57

நிகழாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸýக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போர்ப் பதற்றச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக, இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, அந்தக் குழுவின் தலைவர் கசி குல்மேன் ஃபைவ், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியா, தற்போது மேலும் சீர்குலையும் அபாயக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, கொலம்பியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முயன்று வரும் அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாக காசி குல்மேன் ஃபைவ் தெரிவித்தார்.கொலம்பியாவில் அரசின் ராணுவப் படைகளுக்கும், ஃபார்க் எனப்படும் புரட்சிகர அமைப்பின் கொரில்லா படைகளுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரினால், இதுவரை 2.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 45,000 பேர் காணாமல் போயினர்.இந்நிலையில், கொலம்பியாவில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, அரசுக்கும், புரட்சிகர அமைப்பின் தலைவர் ரோட்ரிகோ லண்டனோவுக்கும் இடையே முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த மாதம் 26-ஆம் தேதி கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில், அமைதி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். அதனால், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முயடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த நாட்டின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியள்ளது. இந்த நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐ.நா. பொதுச் செயலர்: குட்டெரெஸுக்கு பான் கி-மூன் வாழ்த்து | 12-Oct-2016 18:53

ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்டோனியோ குட்டெரெஸுக்கு தற்போது அப்பதவியை வகித்து வரும் பான் கி-மூன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.வாடிகனி இறை நம்பிக்கையும் விளையாட்டும் குறித்து நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: அன்டோனியோ குட்டெரெஸை நான் நன்கு அறிவேன். அவர் போர்ச்சுகலின் பிரதமராக இருந்த அனுபவசாலி. உலக அரசியல், சமூக விவகாரங்களில் அவர் சிறந்த அறிவாளி. ஐ.நா. அகதிகள் நல ஆணையராகப் பணியாற்றிய காலத்தில் அவருடைய மனித நேயப் பண்புகள் சிறப்புற வெளிப்பட்டன.ஐ.நா.வின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பான் கி-மூன் தெரிவித்தார்.

சாபா - புயலுக்கு தென் கொரியாவில் 6 பேர் பலி | 12-Oct-2016 18:51

தென் கொரியாவில் \"சாபா\' புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேரைக் காணவில்லை. கொரிய தீபகற்பத்தின் தென்கடல் பகுதியில் உருவாகிய சாபா புயல் காரணமாக கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூசான் துறைமுகம், உல்ஸான் நகரம் ஆகியவை கடும் பாதிப்புக்குள்ளாகின.சாபா புயலுக்கு இதுவரையில் 6 பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2.30 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின்னர் நிலைமை சீரானது. புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு நடவடிக்கைள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாத்யூ புயல் பாதிப்பு | 12-Oct-2016 18:49 கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹெய்ட்டியை \"மாத்யூ புயல்\" தாக்கியுள்ளது. இந்த புயலில் சிக்கி இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. வேதியியல்: 3 மூலக்கூறு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு | 12-Oct-2016 18:46

நிகழாண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸைச் சேர்ந்த ஜீன்-பியர் சவாஜ், பிரிட்டனின்ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், நெதர்லாந்து நாட்டின் பெர்னார்டு ஃபெரிங்கா ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகச் சிறிய மூலக்கூறு இயந்திரங்களைக் கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்தக் குழு புதன்கிழமை கூறியதாவது: மின் சக்தியின் மூலம் இயக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை ஜீன்-பியர் சவாஜ், ஜே. ஃபிரேஸர் ஸ்டாட்டார்ட், பெர்னார்டு ஃபெரிங்கா ஆகிய மூன்று விஞ்ஞானிகளும் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.1830-களில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மின் மோட்டாரைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், வருங்காலத்தில் ரயில், துணி துவைக்கும் இயந்திரம், மின் விசிறி, உணவு சமைக்கும் இயந்திரம் போன்ற அனைத்திலும் அவர்களது கண்டுபிடிப்புகள் வியாபித்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.அதேபோல், இந்த மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ள மூலக்கூறு இயந்திரங்கள், வருங்காலத்தில் புதிய பொருள்வகையை உருவாக்குவதிலும், உணர்விகள், மின் தேக்கிகள் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் மிகச் சிறந்த பங்காற்றும் என்று நோபல் குழு தெரிவித்தது.வேதியியலுக்கான நோபல் பரிசுடன் வழங்கப்படும் 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி) பரிசுத் தொகை, ஜீன்-பியர் சவாஜ்,ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், பெர்னார்டு ஃபெரிங்கா ஆகிய மூவருக்கும் சமமாகப் பகிர்ந்து வழங்கப்படும்.

பிரான்ஸின் ஸ்டார்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வரும் ஜீன்-பியர் சவாஜ், லூயிஸ்-பாஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் பட்டம் பெற்றவர்.

தளர்வாகப் பிணைந்திருந்த இரு வளைய வடிவ மூலக்கூறுத் தொடர்களை சங்கிலி வளையங்களைப் போல் ஒன்றிணைத்தது 1983-ஆம் ஆண்டில் இவர் ஆற்றிய சாதனை.

தற்போது அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஜே. ஃபிரேஸர் ஸ்டட்டார்ட், மூலக்கூறுமாற்றவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஒரு சிறிய மூலக்கூறை அச்சாகக் கொண்டு முன்னும் பின்னும் நகரும் இரு மூலக்கூறு வளையங்களை இவர் 1991-ஆம் ஆண்டு உருவாக்கினார்.

மூலக்கூறு நானோ தொழில்நுட்ப நிபுணரான பெர்னார்டு ஃபெரிங்கா, நெதர்லாந்தின் குரோனிங்கென் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

முதல்முறையாக ஒரே திசையில் சுழலும் மூலக்கூறு மோட்டாரை 1999-ஆம் ஆண்டு உருவாக்கிய இவர், அதனைக் கொண்டு ஒரு நானோ காரையும் உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு | 12-Oct-2016 18:44

உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளி பண்டிகையை நினைவுபடுத்தும் விதமாக அமெரிக்க அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.தீபாவளி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுவதற்காக அமெரிக்கவாழ் இந்தியர்களும், செல்வாக்குமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அஞ்சல் தலையில் அகல் விளக்கு ஒன்று ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அதன் வெளிச்சத்தில் விளக்கைச் சுற்றியிருக்கும் தங்கத்துகள்கள் மினுமினுக்கின்றன. அதனுடன் ரோஜா இதழ்களும் உள்ளன. அஞ்சல் தலையில் \'ஈண்ஜ்ஹப்ண் ஊஞதஉயஉத மநஅ\' என்று எழுதப்பட்டுள்ளது.முன்னதாக, அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் இந்திய துணைத் தூதரக அதிகாரி ரிவா கங்குலி தாஸ், அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கரோலின் மலோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கிறிஸ்துமஸ், பக்ரீத் போன்ற பண்டிகைகளை நினைவுபடுத்தும் விதமாகவும் அமெரிக்க அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
QUIZ

தற்போதைய நிகழ்வுகள்