GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் பிரிட்டனைச் சேர்ந்த மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு | 12-Oct-2016 18:43

நிகழாண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் தெளலாஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அசாதாரணப் பொருள்களின் பொருண்மை குறித்து மேற்கொண்ட ஆய்வுகளுக்காக அந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.இதுகுறித்து நோபல் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: இயற்பியலுக்காக நிகழாண்டில் நோபல் பரிசு பெற்றுள்ள மூவரும், சில பொருள்களின் அசாதாரண நிலைப்பாடுகளைப் பற்றி அதுவரை அறிந்திராத உண்மைகளை தங்களது ஆய்வுகள் மூலம் விளக்கினர்.முழு மின்கடத்திகள் (சூப்பர் கண்டக்டர்), பாகுத்தன்மை முற்றிலுமற்ற திரவங்கள் (சூப்பர் ஃப்ளூயிட்), மிக மெல்லிய காந்தத் தகடுகள் போன்ற பொருள்களின் அசாதாராணமான பொருண்மைப் பண்புகளை அந்த மூவரும் உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அதற்கான ஆய்வுகளுக்கு, மிகச் சிறந்த கணக்கீட்டு முறைகளை அவர்கள் பயன்படுத்தினர்.பொருண்மை இயற்பியலை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல, அவர்களது ஆய்வுகள் முன்னோடியாக அமைந்துள்ளன.அவர்களது ஆய்வுகள் காரணமாக, சிறப்புக் கட்டமைப்பு கொண்ட பொருள்களை புதிய தலைமுறை மின்சாதனங்கள், வருங்கால கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.இயற்பியலுக்கான நோபல் பரிசுடன் வழங்கப்படும் 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி) பரிசுத் தொகையில் ஒரு பாதி டேவிட் தெளலாஸுக்கும், மற்றொரு பாதி டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ் ஆகியோருக்கு சமமாகப் பகிர்ந்தும் அளிக்கப்படும்.

பிரிட்டன், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள டோவிட் தெளலாஸ், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் பட்டம் பெற்றவர். ஏற்கெனவே, இஸ்ரேலில் வழங்கப்படும் \"வோல்ஃப்\' சர்வதேச விருதை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பொருண்மை இயற்பியலுக்காக அமெரிக்க இயற்பியல் சங்கம் வழங்கும் விருதை இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் பிறந்த மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அமெரிக்காவின் பிரெளன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே மேக்ஸ்வெல் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இயற்பியல் பிரிவில், கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, நியூட்ரினோ ஆராய்ச்சியில் ஈடுபட்ட கனடாவின் ஆர்தர் மெக்டொனால்டு, ஜப்பானின் டகாகி கஜீதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஐசிசி தரவரிசை பட்டியல்: அஸ்வின் 'நம்பர் 1' | 12-Oct-2016 18:31

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஸ்வின் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றிருந்தார். தற்சமயம் அவர் 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டித் தொடர் துவங்குவதற்கு முன்பு தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த அஸ்வின், இந்த வெற்றியின் காரணமாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 900 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை புஜாரா 14-ஆவது இடத்திலும், விராத் கோலி 16-ஆவதுஇடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களை பொறுத்தத வரை இந்தியாவை ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

டெஸ்ட் தரவரிசை: இந்தியா முதலிடம்! | 12-Oct-2016 18:30

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் முந்தைய 2 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, 3-ஆவது போட்டியின் வெற்றி மூலமாக தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதை அடுத்து, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 115 புள்ளிகளுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. இந்திய அணியை முதலிடத்துக்கு வழிநடத்திச் சென்ற கேப்டன் கோலிக்கு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கினார்.

\"டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருதை பெறுவது கெளரவமான தருணமாகும். அணியின் செயல்பாட்டுக்கு ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அணி வீரர்களிடையே நல்லுறவு இருப்பதும், இக்கட்டான தருணங்களில் கைகொடுப்பதுமே இத்தகைய நிலைக்கு அணியை உயர்த்தியுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\' என்று கேப்டன் கோலி கூறினார்.

இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை அறிமுகம் செய்தது உத்தரப் பிரதேச அரசு | 12-Oct-2016 18:25

உத்தரப் பிரதேச அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை இன்று அறிமுகம் செய்தது. உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. இந்த மாநிலத்தின் முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி வகிக்கிறார்.அடுத்த ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இலவச ஸ்மார்ட் போன் திட்டமான :\"சமாஜ்வாதி ஸ்மார்போன் யோஜனா\" என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் இன்று அறிமுகப்படுத்தினார். பதினெட்டு வயது நிரம்பிய ,பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக இலவச ஸ்மார்ட் போனை பெற தகுதியானவர்கள்.மேலும் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10-ம் தேதிவரை இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற விரும்புபவர்கள் இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டு தேர்தல் முடித்த பிறகு பதிவு செய்துள்ள அனைவருக்கும் புதிய இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றனர்.

ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க மத்திய அரசு முடிவு | 12-Oct-2016 18:21

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவி வகித்தபோது, ஐஐஎம் வரைவு மசோதா உருவாக்கப்பட்டது.அந்த மசோதாவில் நாட்டில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. அத்துடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகே ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அம்சமும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் அதிக தன்னாட்சி அதிகாரங்களை ஐஐஎம் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுத்துவிட்டார்.இந்நிலையில், தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் பிரகாஷ் ஜாவடேகர், பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கையை ஏற்று சில திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதன்படி மேற்கொள்ளப்பட்ட மசோதாவில், ஐஐஎம் நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் சென்று ஆய்வு மேற்கொள்ள வகை செய்யும் அம்சம் நீக்கப்பட்டது.மேலும், ஐஐஎம் நிறுவனங்களுக்கு இயக்குநர்களை நியமிப்பதற்கான கூடுதல் அதிகாரம் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம், ஐஐஎம் நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் அதிகாரங்கள் தளர்த்தப்பட்டு அவற்றுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள வழங்கப்பட்டுள்ளன.திருத்தப்பட்ட புதிய மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் உட்பட 6 முதல் 10 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளது—-ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக். | 21-Sep-2016 16:33 ஆயுர்வேதம், சித்தா, யோகா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக ஆயுஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் உட்பட ஆறு முதல் 10 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுஷுக்கென தனிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை புதுதில்லியில் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகவும் இரண்டு மாதங்களுக்குள் இப்பணிகள் முடிவடைந்து திறக்கப்படும் என்று கூறினார். அலோபதி, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மூலம் சுகாதார சேவை வழங்க தேசிய அளவில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் செயல்படுத்த திட்டமிட்டு, நாடு முழுவதும் 10 மாவட்டங்களை தேர்வு செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


QUIZ

தற்போதைய நிகழ்வுகள்