GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் ஆந்திர பிரதேசத்தில், விசாகபட்டினத்தில், 3—வது பிரிக்ஸ் நகரமயமாக்கல் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்குகிறது. | 21-Sep-2016 16:31 ஆந்திர பிரதேசத்தில்,  விசாகபட்டினத்தில், 3 வது பிரிக்ஸ் நகரமயமாக்கல்   கூட்டமைப்பின்  மாநாடு   இன்று  தொடங்குகிறது. மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில்,  மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த மூன்று நாள் மாநாட்டை துவக்கி வைப்பார். இந்த 3 நாள் கூட்டத்தில் முதலீடுகள், நகர மயமாக்கல், புதிய நகரங்களை உருவாக்குவது  உள்ளிட்ட பல விஷயங்களை பிரிக்ஸ் பிரதிநிதிகள் விவாதிப்பார்கள்.  உற்பத்தியை அதிகரிப்பது, நகர்புறத்திற்கான தனிப்பட்ட  நிதி வழி முறை மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற விஷயங்களும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.  இந்த விவாதங்களில் அடிப்படையில் வைசாக் பிரகடனம் தயாரிக்கப்படும், இது அக்டோபர் 15, 16 தேதிகளில்,  கோவாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் முக்கிய பங்கு வகிக்கும். டிராக் ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டியில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா | 21-Sep-2016 16:29

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டிகள் 2016, நேற்று புதுதில்லியில் தொடங்கியது. தொடக்க நாளன்று, இந்தியா, மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

Velodrome எனப்படும் உள் விளையாட்டரங்கு விரைவு சைக்கிள் போட்டியில், இந்தியாவின் Deborah Herold தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் Deborah Herold மற்றும் Kezia Vergheese அடங்கிய இந்திய அணி, கஸகிஸ்தான் அணியைத் தோற்கடித்து தங்கம் வென்றது. ஜூனியர் பிரிவில், இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

முதன் முதலாக, சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் Alena Reji, வெள்ளிப் பதக்கம் வென்றார். 3 கி.மீ. போட்டியில் தமக்கு எதிராக போட்டியிடுபவர் போட்டியில் இருந்து விலகியதால், ராஜ்குமாரி தேவிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ISSF ஜூனியர் உலக்கோப்பை: இந்தியா, 6 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களுடன் 2—வது இடத்தில் உள்ளது. | 21-Sep-2016 16:28 ISSF ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடல் போட்டியில், 25 மீட்டர் ராபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவில்,  இந்தியாவின் RUSHIRAJ BAROT , தங்கம் வென்றார். இந்தியா இதுவரை, 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா, 21 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய ஆடவர் அணி, தங்கம் வென்றது.  5 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்திய ஜூனியர் ஆடவர் அணி, வௌ¢ளிப்பதக்கம் பெற்றது. ஜூனியர் மகளிர் பிரிவில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள்  போட்டியில்,  இந்திய அணி, வெண்கல பதக்கம் வென்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | 21-Sep-2016 16:26 78 வயதான இந்திய வம்சாவளி பிரிட்டிஷ்காரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Lord Narendra Babubhai Patel-ஐ, மருத்துவ துறையில் ஆற்றிய சிறந்த பணிக்காக பிரபல பதிப்பாள் நிறுவனம் கௌரவித்துள்ளது. பிரிட்டனில் மருத்துவம் மற்றும் பொதுப்பணியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக நேற்றிரவு நடந்த ஆசிய சாதனையாளர் விருதில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய இசை மற்றும் நடன விழா சிட்னியில் துவங்கியது | 21-Sep-2016 16:25

இந்தியாவின் உயர்ந்த, பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முதல் இந்திய இசை மற்றும் நடன விழா சிட்னியில் நேற்று துவங்கியது. பத்து வார காலத்திற்கு தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த விழாவை மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா தொடக்கிவைத்தார்.

இந்திய – ஆஸ்திரேலியக் கலைஞர்கள் இணைந்து நடத்திய அற்புதமான நிகழ்சியுடன் விழா தொடங்கியது. இந்த விழா இரு நாடுகளுக்கும் பெருமை சேர்ப்பதாகக் கூறிய மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா, கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் வலுவான தொடர்பை இரு நாட்டினரும் மகிழ்வுடன் அனுபவித்து வருவதாக கூறினார்.

2014 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சிட்னி பயணத்தின் போது, இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்த இந்த முன்முயற்சி குறித்து அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் ஜான் அஜக்கா கூறினார்.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துவரும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என்று அவர் கூறினார். இந்திய அரசின் முயற்சியான இந்த கலாச்சார திருவிழா, ஆஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்புடன், மெல்பர்ன், பெர்த், பிரிஸ்பேன், கான்பெரா மற்றும் அடிலைட் ஆகிய நகரங்களிலும் நடைபெறும்.

17-வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பயங்கரவாதம் பற்றி இந்தியா எழுப்பும் – குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி | 21-Sep-2016 16:23

வெனிசுலாவில் நடைபெறும் 17-வது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பயங்கரவாதம் பற்றி இந்தியா எழுப்பும். Margarita தீவில் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி கூறுகையில், சமூக மற்றும் சர்வதேச அமைதியை பயங்கரவாதம் இடையூறு செய்வதாகவும், மக்கள் அச்சப்படுத்தப்பட்டால், அவர்களால் தங்களது இயல்பை பின்தொடர முடியாது என்றார். ஆகவே, பயங்கரவாதம் தொடர்பான விவகாரம் இந்த மன்றத்தில் எழுப்பப்பட வேண்டும் என்றார்.

இந்த அமைப்பில் உள்ள 120 நாடுகளுக்கும் வளர்ச்சி தொடர்பாக ஓரே செயல்திட்டம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆனால் நமக்கு அமைதியும், ஒருமைப்பாடும் தேவை என்றார். ஐ.நா.வின் சீர்திருத்தம் கொண்டு வருவது, மேற்காசியாவில் உள்ள நிலைமை, பருவநிலை மாற்றம் மற்றும் அணு ஆயுதங்களை களைவது போன்றவை குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டிற்கு, இந்தியப் பிரதிநிதிகள் குழுவிற்கு குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி தலைமை வகிப்பார். அமைச்சர்கள் நிலையிலும், மூத்த அதிகாரிகள் நிலையிலும் ஆலோசனை நடத்தப்படும். ஐ.நா அமைப்பிற்குப் பிறகு, அதிக நாடுகள் உறுப்பினராக உள்ள அமைப்பு அணிசேரா நாடுகளின் அமைப்பாகும். 55 ஆண்டுகளுக்கு முன்னதாக, உருவாக்கப்பட்ட இந்த அணிசேரா நாடுகள் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்