GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் கங்கை நதிக்கரையை ஒட்டியுள்ள 5 ஆயிரம் கிராமங்களில், கரிம வேளாண்மை வளர்ச்சியில், வேளாண் அமைச்சகம் ஈடுபடும் | 21-Sep-2016 16:21

கங்கை நதியையொட்டி உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களின் விவசாயிகள், கரிம வேளாண்மையில் ஈடுபட ஊக்கம் அளிக்கும் நோக்குடன், வேளாண் அமைச்சகத்துடன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கங்கை நதியில் உரம் கலந்த நீரினால் ஏற்படும் மாசுக் கட்டுப்பாட்டில், இது உதவிடும்.

புதுதில்லியில், நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியும், வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கும் கலந்து கொண்டனர். இந்த உடன்படிக்கையின்படி, கங்கை நதிக்கரையை ஒட்டியுள்ள 5 ஆயிரம் கிராமங்களில், கரிம வேளாண்மை வளர்ச்சியில், வேளாண் அமைச்சகம் ஈடுபடும். Paramaparagat வேளான் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஒவ்வோரு கிராமப் பஞ்சாயத்துடன் இணைந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நீர் போக்குவரத்து முறையை மேம்படுத்த, உலக வங்கி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு | 21-Sep-2016 16:20

அஸ்ஸாம் மாநிலத்தில், நீர் போக்குவரத்து முறையை மேம்படுத்த, உலக வங்கி சுமார் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கின்றது. இதை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநிலப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர மோகன் பாடோவரியிடம் தெரிவித்தார்.

தண்ணீர் துறைகள் உட்பட, உள்நாட்டு நீர் போக்குவரத்து முறையை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. துறைமுக அணைகரைகளை மறுகட்டுமானம் செய்ய, 100 சதவிகித மத்திய அரசின் உதவி அளிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி உறுதி அளித்தார். இதனிடையே, ஜோர்ஹாட்டில் இருக்கும் Tocklai தேயிலை ஆராய்ச்சி மையத்தில், தேயிலை தோட்டக்கலைப் பற்றிய வகுப்புகளை நடத்த, திரு. பாடோவரி, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தில்லியில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். தேயிலை வாரியத்தின் தலைமை அலுவலகத்தை கொல்கத்தாவிலிருந்து கௌஹாத்திக்கு மாற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிலேயே அதிக திறன்வாய்ந்த சிறப்புக் கணினியை ஐ.ஐ.டி கௌஹாத்தி இன்று பெறும். | 21-Sep-2016 16:19 நாட்டிலேயே அதிக திறன்வாய்ந்த சிறப்புக் கணினியை ஐ.ஐ.டி கௌஹாத்தி இன்று பெறும். PARAM ISHAN என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்புக் கணினியை, கௌஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இன்று இயக்கி வைப்பார். Centre for Development of Advanced Computing என்ற மையத்துடன் இணைந்து, ஐ.ஐ.டி கௌஹாத்தி இந்த திறன்மிக்க கணினியை வடிவமைத்துள்ளது. வினாடிக்கு சுமார் 250 டிரில்லியன் புள்ளிகள் என்ற அளவில் செயல்படும் இந்த கணினி, 300 TB அளவிலான தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த சிறப்பு கணினியினால், ஐ.ஐ.டி கௌஹாத்தி கல்வி நிறுவனத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் பயனடைவார்கள். மத்திய சுற்றுலா அமைச்சகம் தூய்மை வாரத்தை அனுசரிக்க முடிவு. | 21-Sep-2016 16:17

வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய சுற்றுலா அமைச்சகம் தூய்மை வாரத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய இந்த தூய்மை வாரம், இம்மாதம் 30-ஆம் தேதி வரை தொடரும்.

இந்தக் காலகட்டத்தில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை அமைச்சகம் நடத்த உள்ளதாக அரசு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 சுற்றுலா தலங்களில் அதிகாரிகளும், பணியாளர்களும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

புதுதில்லியில் உள்ள போக்குவரத்து அமைச்சக அலுவலகத்தில் பழையக் கோப்புகளை நீக்கி, அலுவலகத்திற்கு உள்ளேயும் அலுவலகத்தைச் சுற்றிலும் தூய்மைப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

தூய்மை குறித்த கட்டுரைப் போட்டிகள் ஆங்கிலத்தில் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதியும், ஹிந்தியில் 25-ஆம் தேதியும் நடத்தப்படும். உலகச் சுற்றுலா தினமான செப்டெம்பர் 27-ஆம் தேதியன்று, போக்குவரத்துத்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து இந்தியா கேட் வரை ஓட்டம் ஒன்று நடத்தப்படும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

500-வது டெஸ்டில் கால்பதிக்கும் இந்திய அணி: சி.கே.நாயுடு முதல் விராட் கோலி வரை ஓர் அலசல் | 21-Sep-2016 16:07

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வரும் 22-ம் தேதி கான்பூர் கீரின்பார்க் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி. 1932-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்த இந்தியா 84 வருட கிரிக்கெட் பயணத்தில் உச்சங்களையும் தொட்டது. அதேவேளையில் அதளபாதாளத்திலும் விழுந்தது. அதுபற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

அறிமுக போட்டி

1932 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக சி.கே.நாயுடு தலைமையில் டெஸ்டில் காலடி எடுத்துவைத்தது இந்திய அணி. கிரிக்கெட்டின் சொர்க்கபுரியாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி 3 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியா 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த ஆட்டத்தின் இரு இன்னிங்ஸிலும் இந்திய வீரர்கள் ஒருவர் கூட பவுண்டரி அடிக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு சிக்ஸர் அடித்திருந்தது. இதை 9-வது வீரராக களமிறங்கிய ரிச்சர்டு பிரவுன் அடித்திருந்தார்.

1932-1946-ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியுடன் மட்டும் தான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த 14 ஆண்டு கால இடைவெளியில் இரு அணிகள் இடையே 10 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. இதில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை.

1947-48-ம் ஆண்டு முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-0 என இழந்தது. 1948 - 49-ம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவில் விளையாடியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு ஆட்டங்கள் டிரா ஆனது. சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற அந்த தொடரிலும் வேதனையே ஏற்பட்டது.

20 ஆண்டுகள் கழித்து தான் இந்தியா முதல் வெற்றிக் கனியை பறித்தது. 1952-ல் ஹஸாரே தலைமையில் இந்தியா தனது 25-வது டெஸ்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இந்தியா சார்பில் பங்கஜ் ராய், பாலி உமரிக்கர் இருவரும் சதம் அடித்தார்கள். வினூ மங்கட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் முதல் வெற்றி சென்னையில் அமைந்தது என்பது வரலாற்றுச் சிறப்பு.

முதல் வெற்றிக்கு பின்னர்தான் இந்திய அணியின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. 1952 -1956 வரையிலான காலக்கட்டத்தில் 20 போட்டிகளில் இரண்டில் மட்டும் தோற்றது இந்திய அணி. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் 16 போட்டிகளில் 12 தோல்விகளை இந்திய அணி சந்தித்தது.

இதையடுத்து 1959-1961 வரை யிலான காலகட்டத்தில் விளையாடிய 14 டெஸ்ட் போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றது. ஒன்றில் தோற்றது. இந்த சீசனில் தொடர்ச் சியாக ஒன்பது போட்டிகளை இந்திய அணி டிரா செய்தது. இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப் படுகிறது.

டெஸ்ட் உலகில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற சூழ்நிலை உருவாகிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகளின் வடிவில் ஆபத்து வந்தது. மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடிய இந்திய அணி 5 ஆட்டத்திலும் படுதோல்விகளை சந்தித்தது. இந்த தொடர் முடிந்தவேகத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி சொந்த மண்ணிலும் இந்திய அணியை அலறவைத்தது. இந்த வெற்றி களுக்கு பின்னர் கால் நூற்றாண்டுகளுகு மேற்கிந்தியத் தீவுகளின் ராஜ்ஜியம் தொடர்ந்தது.

1962-1883 காலக்கட்டங்களில் இந்திய அணி சுழற்பந்து வீச்சால் இந்திய துணைக்கண்ட போட்டிகளில் எதிரணியை சுழலால் மிரட்டியது. பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர், எரிப்பாலி பிரசன்னா, ஸ்ரீநிவாஸ் வெங்கட் ராகவன் ஆகியோர் சுழலில் மாயாஜாலம் காட்டினர். இவர்கள் நால்வரும் இணைந்து 231 போட்டி களில் மொத்தம் 853 விக்கெட்கள் சாய்த்தனர்.

1971-ல் போர்ட் ஆப் ஸ்பெயினில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடிக்க இந்தியா வெற்றி பெற்றது. கவாஸ்கரை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொஹிந்தர் அமர்நாத், கபில்தேவ், ரவி சாஸ்திரி, பி.எஸ்.சந்து, வெங்சர்க்கார், கிர்மானி என நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள்.

1983 உலகக்கோப்பையை இந்தியா வென்றதும், இந்திய ரசிகர்களை கிரிக்கெட் ஆட்கொண்டு விட்டது என்றுதான் கூற வேண்டும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் ரேடியோ வர்ணனையில் கேட்ட ரசிகனின் காதுகளில் கிரிக்கெட் நாமம் புகுந்தது.

1986-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகள் முதல் டெஸ்டில் மோதின. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 574 ரன்கள் குவித்தது. ஆஸி. கேப்டன் டீன் ஜோன்ஸ் இரட்டைச் சதமும், ஆலன் பார்டர், டேவிட் பூன் சதமும் விளாசினர்.

இந்திய அணியில் காந்த், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன் அரை சதம் அடிக்க, கபில்தேவ் அதிரடியாக சதம் விளாசினார். இதனால் இந்தியா பாலோ ஆனை தவிர்த்தது மட்டுமில்லாமல் 397 ரன்களையும் குவித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 170 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 347 ரன்கள் எடுத்தது. இதனால் வரலாற்றில் முதன் முறையாக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி டை ஆனது.

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவை தலைநிமிர வைத்ததில் சச்சின் டெண்டுல்கருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளுக்கும் கிரிக்கெட்டை கொண்டு சேர்த்தார் சச்சின். 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமானார் சச்சின். 16 வயதிலேயே புயலாக உருவெடுத்த சச்சின் சுழன்றடித்ததில் சாயாத பந்து வீச்சாளர்களே இல்லை.

கங்குலி கேப்டனான பிறகு இந்திய அணியை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச்சென்றார். 2000-2007 வரை சேவக், டிராவிட், லட்சுமணன், சச்சின், ஹர்பஜன் சிங், கும்ப்ளே என விளையாடும் லெவனில் நட்சத்திர பட்டாளமே இருந்தது. பேட்டிங்கில் சச்சின், கங்குலி, டிராவிட் லட்சுமண் ஆகியோரை கொண்ட நால்வர் கூட்டணி எதிரணிக்கு சிம்ம சொப்பனாக திகழ்ந்தது.

2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் இன்ற ளவும் வரலாற்றின் சிறந்த டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சேவக் அடுத் தடுத்து அடித்த முச்சதம் பிரமிக்க வைத்தது.

2007-2011 வரையிலான காலக் கட்டம் இந்திய அணிக்கு பொற்காலம். கங்குலியால் விதைக்கப்பட்ட இந்திய அணி வெற்றியை அறுவடை செய்தது. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக இந்திய அணி முதலிடம் பிடித்து அசத்தியது. உலகின் அத்தனை அணிகளையும் இந்தியா மிரள வைத்தது. இந்த காலக்கட்டத்தில் 47 போட்டிகளில் 22-ல் வெற்றி பெற்று வரலாறு படைத்தது இந்திய அணி.

2011-ம் ஆண்டு மத்தியில் இருந்து 2015 வரை இந்திய அணி கடும் சரிவை கண்டது. ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற தோனிக்கு சோதனையாக அமைந்தது. இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெரும் உதை வாங்கியது. தொடர் தோல்விகளால் 2014-ம் ஆண்டு தோனி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதுவும் ஆஸ்திரேலிய பயணத்தின் கடைசி கட்டத்தில். நட்டாற்றில் விட்ட கதையாக அணியை கையில் எடுத்தார் விராட் கோலி.

விராட் கோலியின் தலை மையில் முற்றிலும் மாறுபட்ட வியூகங்களுடன் வெற்றிகளை வசப்படுத்தி வருகிறது இந்திய அணி. கங்குலி உருவாக்கிய அணி யில் எப்படி ஒரு வெற்றி வேட்கை இருந்ததோ, அதனை தற்போது காணமுடிகிறது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.

கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி, ஆறு போட்டியில் வெற்றி என நேர்மறையாக இருக்கிறது இந்திய அணி. வெற்றி ஒன்றுதான் இலக்கு, அதுவே பிரதான நோக்கமாக கொண்டு அணியை வழிநடத்தும் விராட் கோலியிடம் இருந்து இன்னும் அதிக வெற்றிகள் கிடைக்கக்கூடும்.

சர்வதேச துப்பாக்கி சுடுதலில் மதுரை மாணவர்கள் சாதனை | 21-Sep-2016 15:59

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அஜர்பைசானின் கபாலா நகரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் சர்வதேச துப்பாக்கிக் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்றனர். இதில் 50 மீட்டர் புரோன் ரைபிள் பிரிவில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர் அஜய் நிதீஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலைக்கல்லூரி மாணவர் சர்வேஜ் சொருத் சங்கர் வெண்கலம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற இருவரும் நாளை மதுரைக்கு வருகின்றனர். பதக்கம் வென்ற வீரர் களுக்கு அவர்களது கல்வி நிறுவ னங்கள், பாராட்டு தெரிவித்துள்ளன.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்