GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் | 21-Sep-2016 15:57

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது.

பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல்பர் நிஷாத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு கைகளும் இல்லாதவரான பிரேசிலை சேர்ந்த ஜோனதன் பாஸ்டோஸ், கால்களால் கிதார் இசைத்து அசத்தினார். தொடர்ந்து கேபி அமர்டான்ஸ், பெர்ணாண்டஸ், வன்சியா டி மட்டா உள்ளிட்டோரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கொடி அணிவகுப்பின் போது, இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார். 2020 பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி ரியோ நகர மேயர் எடுரடோ பயஸ், பாராலிம்பிக் கொடியை சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் கிராவனிடம் ஒப்படைத்தார். அவர் அதனை டோக்கியோ நகர கவர்னர் யூரிகோ கொய்கியிடம் ஒப்படைத்தார்.

இதன்பின் ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜப்பானின் பிரபல மாடலான ஜிமிகோ மேடையில் தோன்றி, இடது காலை இழந்தவரும், தொழில்முறை நடன கலைஞரு மான கோச்சி ஒமியை அறிமுகப் படுத்தினார். பின்னர் அவர் நடனம் ஆடி பார்வையாளர்களை அசத்தினார். தவிர, ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா போல பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவுவிழாவும் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் கோலாகல மாக நிறைவடைந்தது.

107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது. இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்துள்ளது.

இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்: ஐ.நா. சபை வெளியீடு | 21-Sep-2016 15:49

ஐ.நா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள், ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர். நீடித்த வளர்ச்சி இலக்கில் அவர்களின் தலைமைப் பண்பு, ஏழ்மை ஒழிப்பில் பங்களிப்பு, சமத்துவம், சமநீதிக்கான போராட்டம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டை எதிர் கொள்ளும் திட்டம் ஆகியவை சார்ந்து 17 இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் கல்வி, மறுவாழ்வு, பாலின அத்துமீறல்களுக்கு எதி ரான நடவடிக்கைக்காக ஷீசேய்ஸ் என்ற அமைப்பை நிறுவிய திரிஷா ஷெட்டி (25) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

திருமணம், திருவிழாக்கள், கொண்டாட்டங்களில் உணவுகள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைத் தேவைப்படுவோர்க்கு கொண்டு சேர்ப்பதற்காக ஃபீடிங் இந்தியா அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வரும் அங்கித் கவார்ட்டா (24) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்தியர் ஆவார்.

அமெரிக்க வாழ் இந்தியர் கரண் ஜெராத் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கடலுக்கடி யில் உள்ள எண்ணெய்க் கிணறு களில் இருந்து எண்ணெய் எடுக்கும்போது, எண்ணெய் சிந்தாமல் இருப்பதற்கான மூடி அமைப்பைக் கண்டறிந்ததற்காக இவர் இப்பட்டியலில் இடம்பிடித் துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழுத் தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம் | 21-Sep-2016 15:40 முன்னாள் விக்கெட் கீப்பரும் ஆந்திராவைச் சேர்ந்தவருமான எம்.எஸ்.கே. பிரசாத், சந்தீப் பாட்டீலுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் 87-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மும்பையில் இன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.  சந்தீப் பாட்டீல் தலைமை முந்தைய தேர்வுக்குழுவில் பிரசாத் பணியாற்றினார். தற்போது இவர் தலைவராக நியமிக்கப்பட, சரந்தீப் சிங், ககன் கோடா, தேவங் காந்தி, ஜதின் பராஞ்பே ஆகியோர் 5 நபர் தேர்வுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்தத்தேர்வு குழு இங்கிலாந்துக்கு எதிராக நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகளுக்கான தொடரில் விளையாடும் இந்திய அணியைத் தேர்வு செய்து பணியைத் தொடங்குகின்றனர்.  எல்.ஐ.சி. தலைவராக வி.கே. சர்மா பொறுப்பேற்பு | 21-Sep-2016 15:35

பொதுத் துறையைச் சேர்ந்த மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் தலைவராக வி.கே. சர்மா கூடுதல் பொறுப்பேற்றார். எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவராக இருந்த எஸ்.கே. ராய் வெள்ளிக்கிழமை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, தற்போது நிர்வாக இயக்குநர் பொறுப்பில் உள்ள வி.கே. சர்மா, கூடுதல் பொறுப்பாக தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று எல்.ஐ.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.பணிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே, எஸ்.கே.ராய் கடந்த ஜூன் மாதத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதனை மத்திய அரசு அப்போது ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் எல்.ஐ.சி. தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எல்.ஐ.சி நிறுவனத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ள வி.கே.சர்மா, கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

வரலாறு காணாத மதிப்பில் அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவ உதவி ஒப்பந்தம் | 21-Sep-2016 15:25

வரலாறு காணாத வகையில், அமெரிக்கா - இஸ்ரேல் இடையே ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ உதவி ஒப்பந்தம் கையெழுத்தானது.இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியதாவது: இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,800 கோடி டாலர் (சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி) மதிப்பிலான ராணுவ உதவி பெறும் விதமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராணுவ உதவி வழங்கப்படும். இதன் கீழ் 3,300 கோடி டாலர் ராணுவ தளவடாங்களுக்கான நிதி உதவியாகவும், ஏவுகணைத் திட்டங்களுக்கு 500 கோடி டாலரும் வழங்கப்படுகிறது. இஸ்ரேலின் ஏவுகணைத் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி அளிப்பது இதுவே முதல் முறை.இந்த ஒப்பந்தத்தின் மூலம், அதி நவீன எஃப்-15, எஃப்-35 ரகப் போர் விமானங்கள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு வழங்கப்படும். தரைப் படையினரின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் விதமான தளவாடங்கள் வழங்கப்படும். ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆளாகி வரும் நிலையில், தற்காப்புக்கான \"அயர்ன் டோம்\' உள்ளிட்ட சாதனங்கள் அளிக்கப்படும்.இந்த நிதி மற்றும் தளவாட உதவியானது, ஏற்கெனவே இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்டு வரப்படும் உதவிகளைத் தவிர கூடுதலாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய ராணுவ உதவியை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா இதுவரை வழங்கியதில்லை என்றார்.இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க அரசு உறுதிபூண்டுள்ளதை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்றார்.இது தொடர்பாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப் நேஜல் கூறியதாவது: வரலாறு காணாத வகையிலான ராணுவ உதவி ஒப்பந்தம் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதையும்விட இஸ்ரேலுக்கு ஏவுகணை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் ராணுவத் தளவாடங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

மீண்டும் உலக வங்கி தலைவராகிறார் ஜிம் யோங் கிம் | 21-Sep-2016 15:24

உலக வங்கித் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்காத நிலையில்  2-ஆவது முறையாகத் தொடர்ந்து உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.இதுகுறித்து உலக வங்கி நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:உலக வங்கி தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் காலம் புதன்கிழமை முடிந்தது. தற்போது தலைவராக உள்ள ஜிம் யோங் கிம்முக்கு போட்டியாக யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து, விதிமுறைகளின்படி, கிம்முடன் நேர்காணல் நடத்திய பிறகு, உலக வங்கி தலைவர் பதவிக்கு அவர் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்படுவார்.இதற்கான பணிகள் 2016-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்தக் கூட்டம் அக்டோபர் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று உலக வங்கி நிர்வாகக் குழு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.தற்போது உலக வங்கி தலைவராக உள்ள கிம் யோங் கிம் (56) 2012-ஆம் ஆண்டு அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் வரும் 2017-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.கொரிய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஜிம் யோங் கிம், உலக நாடுகளிடையே நிலவி வரும் தீவிர வறுமையைக் குறைக்கும் பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து செயலாற்றியவர். இதனால், அவருக்கு உலக வங்கியின் முக்கிய பங்குதாரர்களான அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளின் அமோக ஆதரவு உள்ளது.
QUIZ

தற்போதைய நிகழ்வுகள்