GK & Current Affairs in Tamil!

QUIZ

அனைத்து நடப்பு செய்திகள் தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் பெரிய சூரிய மின் சக்தி நிலையம்: தேசத்திற்கு அர்ப்பணிப்பு! | 21-Sep-2016 15:19

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள, அதானி குழுமத்திற்கு சொந்தமான 648  மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஒரே இடத்தில் அமைந்துள்ள  648  மெகா வாட் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பாக்., பயங்கரவாத நாடு : அமெரிக்காவில் தீர்மானம் | 21-Sep-2016 15:08

பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும் தீர்மானத்தை அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர் கொண்டு வந்துள்ளனர். இது ஐ.நா.,வில் மனிதநேயம் குறித்து பாக்., பிரதமர் நவாஸ் ஷரீப் பேசுவதற்கு தீர்மானத்துள்ள உரைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பதற்றம் தொடர்பாக ஐ.நா., சபையில் பேச பாக்., பிரதமர் நவாஸ் ெஷரீப் முடிவு செய்துள்ளார். காஷ்மீரில் இந்திய ராணுவம் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்ட தீர்மானத்துள்ளார். இந்நிலையில் பாக்.,க்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எம்.பி.,க்கள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் 4 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறதா, இல்லையா என்பது பற்றி 90 நாட்களுக்குள் அமெரிக்க அதிபர் விரிவான அறிக்கையை அளிப்பார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த 30 நாட்களில் அமெரிக்க பாதுகாப்பு துறை , பாக்., பயங்கரவாத ஆதரவு நாடா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார். அமெரிக்க எம்.பி,க்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் பாக்., மட்டுமின்றி இஸ்லாமாத் பல ஆண்டுகளாக ஒசாமா பின்லேடன் உள்ளிட்ட அமெரிக்க எதிரிகள் பலருக்கு புகழிடம் அளித்து வருவதாகவும், பயங்கவாத போருக்கு ஆதுரவு அளித்து வருவதாகவும், இதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 59% பகுதி நிலஅதிர்வால் பாதிக்கப்படும் அபாயம் | 21-Sep-2016 15:04

இந்தியாவில் சுமார் 59 சதவீதம் நிலப்பகுதிகளுக்கு கடுமையான அல்லது மிதமான அல்லது லேசான நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் இருப்பதாக நிலஅதிர்வு மையம் எச்சரித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் சார்பில் நிலஅதிர்வு தொடர்பான புதிய வரைபடம் ஒன்று ஆப்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 3 மாதங்களில் மொபைல் போன்கள் மூலம் செயல்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களின் வீடு அல்லது அலுவலகம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வகையில் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்சை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் உள்ள 59 சதவீதம் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30.4 கோடி மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையில் உள்ளனர் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதனை | 21-Sep-2016 15:02

இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன், மத்திய அரசு தயாரித்துள்ள, தரையில் இருந்து, நீண்ட துாரம் விண்ணில் சென்று இலக்கை தாக்கும், அதி நவீன ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன், தரையில் இருந்து, விண்ணில் பாய்ந்து சென்று தாக்கி, இலக்கை அழிக்க வல்ல, நவீன ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது. இதில், நடுத்தர துாரம் செல்லும் ஏவுகணை, ஜூன் மாதம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தரையில் இருந்து, நீண்ட துாரம் பயணம் செய்து, விண்ணில் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து, இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனைக்காக, சந்திப்பூர் ஏவுதளத்தை சுற்றி வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேலம், மதுரை, தஞ்சை, வேலூர் | 21-Sep-2016 14:45 மத்திய அரசின் நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சேலம், மதுரை, தஞ்சை, வேலூருக்கு இடம் கிடைத்தது. இதனை மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் நகர் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பல்வேறு போட்டிகள் மத்தியில் நகரங்கள் தேர்வு செய்யப்படும். ஏற்கனவே பல்வேறு நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று 3 வது பட்டியல் வெளியானது.  இதில் உத்திரபிரதேசம், அசாம், தமிழகம், மத்தியபிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 67 நகரங்கள் போட்டியிட்டதில் தற்போது 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சேலம், மதுரை, தஞ்சை, வேலூர், திருப்பதி, மங்களூரு, அமிர்தசரஸ், குவாலியர், ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  உலக அமைதி தினம் | 21-Sep-2016 14:41  

உலக அமைதி நாள் (International Day of Peace)  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையின் சகல உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினம் 1981இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இருந்து இத்தினம்  செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி,  ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்