GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - நூல் மற்றும் ஆசிரியர் தி பேர்ட்ஸ் ஆப் பன்னி கிராஸ்லாண்ட் நூல் – பிரதமர் வெளியிட்டார் | 29-Jun-2016 16:14

“தி பேர்ட்ஸ் ஆப் பன்னி கிராஸ்லாண்ட்” புத்தகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று வெளியிட்டார். பாலைவனம் சூழலியல் குஜராத் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் தொகுத்த இந்த நூலை பிரதமரிடம் வழங்கினர்.

குஜராத்தின் கட்ச் – பகுதியில் உள்ள பன்னி பகுதியில் காணப்படும் 250 வகையான பறவைகள் குறித்த ஆய்வு தொடர்பான அறிக்கைகளை இப்புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புஜ்ஜில் உள்ள பாலைவனம் சூழலியல் குஜராத் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ரான் ஆப் கட்ச்சின் தாவரங்கள், பறவைகள் மற்றும் கடல்சார் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது.

வீரப்பனைக் கொன்றது எப்படி?: புத்தகம் எழுதுகிறார் கே.விஜயகுமார் | 08-Jun-2016 16:56

சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்றது எப்படி? என்பது குறித்து புத்தகம் எழுதி வருகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார்.

இவர்தான் வீரப்பனைச் சுட்டுக் கொன்ற தமிழக அதிரடிப் படைக்கு தலைவராக இருந்தார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக, கேரள போலீஸாருக்கு கடும் சவாலாக விளங்கிய வீரப்பன், 180-க்கும் மேற்பட்டோரை கொலை செய்தார். அவர்களில் வனத்துறையினரும், போலீஸாருமே அதிகம். இது தவிர தந்தங்களுக்காக 200-க்கும் மேற்பட்ட யானைகளை வேட்டையாடிய வீரப்பன், பல கோடி மதிப்புள்ள சந்தன மரங்களையும் வெட்டிக் கடத்தினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் வீரப்பனும் அவரது 3 கூட்டாளிகளும் ஆம்புலன்ஸில் வந்தபோது அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பனை கொன்றது குறித்து கே.விஜயகுமார் புத்தகம் எழுதி வருகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: வீரப்பன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த உண்மையைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்தப் புத்தகத்தை எழுதுகிறேன். எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக சிலரது பெயரை நான் வெளியிடப்போவதில்லை என்றார் அவர்.

ஈரான் தலைவர் சையத் அலி காமேனிக்கு குபிக் எழுத்தில் எழுதப்பட்ட குரானை பரிசளி்த்த பிரதமர் மோடி | 23-May-2016 23:00 ஈரான் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் தலைவர் சையத் அலி காமேனிக்கு 7-ம் நூற்றாண்டை சேர்ந்த குபிக் எழுத்தில் எழுதப்பட்ட அரிய குரான் புனித நூலை பரிசளித்துள்ளார். இந்த அரிய நூல் உத்தரபிரதேசத்தில் உள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமான ராம்பூர் ராசா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகும். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு பாரசீக மொழியில் தொகுக்கப்பட்ட மிர்சா காலிப் கவிதைகள் அடங்கிய அரிய பழமையான நூலை பரிசளித்திருக்கிறார் மோடி. இந்த நூல் முதல்முறையாக கடந்த 1863-ல் வெளிவந்ததாகும். கல்லியத்-இ-பார்சி-இ-காலிப் என்னும் இந்த கவித்தொகுப்பு நூல் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டதாகும். அதேபோல், பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 1715-ம் ஆண்டை சேர்ந்த அரிய ராமாயண நூலையும் பரிசளித்தார் பிரதமர் மோடி. 


QUIZ

தற்போதைய நிகழ்வுகள்