GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - சுற்றுப்புற சூழ்நிலை இந்தியாவில் 59% பகுதி நிலஅதிர்வால் பாதிக்கப்படும் அபாயம் | 21-Sep-2016 15:04

இந்தியாவில் சுமார் 59 சதவீதம் நிலப்பகுதிகளுக்கு கடுமையான அல்லது மிதமான அல்லது லேசான நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் இருப்பதாக நிலஅதிர்வு மையம் எச்சரித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் சார்பில் நிலஅதிர்வு தொடர்பான புதிய வரைபடம் ஒன்று ஆப்ஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 3 மாதங்களில் மொபைல் போன்கள் மூலம் செயல்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களின் வீடு அல்லது அலுவலகம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் வகையில் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்சை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் உள்ள 59 சதவீதம் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் தன்மை கொண்டவை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30.4 கோடி மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாய நிலையில் உள்ளனர் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் அரசியல், சினிமா தொடர்பான போஸ்டர்கள் ஒட்டுவதற்கு தடை: | 23-Jun-2016 11:00

பெங்களூருவில் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள், அரசியல் தலைவர்களின் கட் அவுட்கள், சினிமா போஸ்டர்கள் ஆகியவற்றை பொது இடங்களில் ஒட்டுவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.

அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் பண்டிகை காலங்களின் போது பெங்களூருவில் உள்ள பொது இடங் களில் போஸ்டர்கள் ஓட்டுவது, பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது அதிகரித்து வந்தது. இந்த பேனர் கலாச்சாரத்தால் நகரின் அழகு கெடுவதாகவும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

மேலும், சினிமா போஸ்டர்கள் ஆபாசமாக இருப்பதாகவும், அதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதாகவும் புகார்கள் எழுந்தன. போஸ்டர்களால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும், உயர்ந்த பேனர்களால் சாலைகள் மறைக்கப்படுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப் பட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் பொது இடங்களில் உள்ள சுற்றுசுவர்களில் ஒட்டப்படும் அனைத்து வகையான நோட்டீஸ்கள், போஸ்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்காக வைக்கப்படும் கட்-அவுட்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் பெங்களூருவில் பேனர் கலாச்சாரத்துக்கு மாநகராட்சி நேற்று அதிரடி தடை விதித்தது. அத்துடன் தடையை மீறினால் திறந்தவெளி விளம்பர தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. விதியை மீறுபவர்களை கண்காணிப்பதற்காக பெங்களூரு மாநகராட்சி சார்பில் அதிரடிப்படையும் தொடங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரசியல் தொடர்பான நோட்டீஸ்கள், கட் அவுட்களை வைப்பதற்காக நகரில் 20 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. எனினும் இதற்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில்1,500 கி.மீ.க்கு மரங்கள் நடத் திட்டம் | 23-Jun-2016 10:48

சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 1ஆம் தேதி, தேசிய நெடுஞ்சாலைகளில் 1,500 கி.மீ. தொலைவுக்கு மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களால், சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கில். சாலைப் பணிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.5 லட்சம் கோடியில் ஒரு சதவீதம் (ரூ.5,000 கோடி) சாலையோரங்களில் மரங்கள் நடும் திட்டத்துக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நெடுஞ்சாலைகளில் மரங்கள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ஜூலை 1ஆம் தேதி, தேசிய நெடுஞ்சாலைகளில் 1,500 கி.மீ. தொலைவுக்கு மரங்கள் நடப்படவுள்ளன. இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஏற்கெனவே விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்தத் முன்மாதிரி திட்டத்துக்கு தன்னார்வ அமைப்புகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், கூட்டுறவு அமைப்புகள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவை ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்று நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்தார்.

பொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை | 22-Jun-2016 14:29 ரொட்டி வகைகளில் ரசாயனப் பொருளான பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பது உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மத்திய அரசு அதன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.

உணவுப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் (எப்எஸ்எஸ்ஏஐ) சிஇஓ பவன்குமார் அகர்வால் கூறும்போது, \"ரொட்டி வகைகளில் ரசாயனப் பொருளான பொட்டாசியம் புரோமேட் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது என்பதை சிஎஸ்இ உறுதி செய்துள்ளது.

எனவே, உணவு பதப்படுத்துதலுக்காக பொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு முற்றிலுமான தடை விதிக்கப்படுகிறது. பொட்டாசியம் ஐயோடைட் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்\" என்றார்.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) மாசு கண்காணிப்பு ஆய்வகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டி, பாவ் மற்றும் பன்கள், பர்கர் ரொட்டி மற்றும் பிஸா ரொட்டிகள் உட்பட 38 வகையான உணவுப் பொருட்களில் 84 சதவீத மாதிரிகளில் பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருந்தது தெரியவந்ததாக தெரிவித்தது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தற்போது உணவுப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு பொட்டாசியம் புரோமேட் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது புதுதில்லியில் சுற்றுச்சூழல் சுகாதார மையம். | 21-May-2016 14:01 புதுதில்லியில்சுற்றுச் சூழல்  சுகாதாரத்துக்கான  மையத்தை  மத்திய  சுகாதார அமைச்சர்  ஜெ.பி.நட்டா  திறந்து  வைத்தார்.  காற்று  மாசுபாடு, தட்பவெப்பநிலை மாறுபாடு, பூச்சிக்கொல்லி  பயன்பாடு, துப்புரவு  ஆகியன  பற்றி  இந்த  மையம் ஆராய்ந்து  அரசுக்கு  அறிக்கைகளைச்  சமர்ப்பிக்கும்.  இந்த  துறையில் ஆராய்ச்சி  மிகவும்  அவசியம்  என்று  அமைச்சர்  தெரிவித்தார். 170 நாடுகளுடன் சேர்ந்து பாரீஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்து | 24-Apr-2016 08:10

170 நாடுகளுடன் சேர்ந்து, பாரீஸ் பருவ நிலை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்து போட்டது. இது, புவியை வெப்பம் அடைய செய்யும் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்க உதவும்.

‘குளோபல் வார்மிங்’ என்று சொல்லப்படுகிற உலக வெப்பமயமாதல், இப்போது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள பிரச்சினை ஆகும். புவியை பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றம்தான் வெப்பமயமாக்குவதாக கூறப்படுகிறது.

இந்த வாயுக்கள் வெளியேற்றத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் அரங்கில் 171 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஓரணியில் திரண்டனர்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நடத்திய இந்த கூட்டத்தில் ‘பாரீஸ் உடன்படிக்கை’ என்று அழைக்கப்படுகிற உடன்பாட்டில் இந்தியா உள்பட 171 நாடுகள் கையெழுத்திட்டன.

இந்தியாவின் சார்பில் இந்த உடன்படிக்கையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கையெழுத்திட்டார்.

இந்த உடன்படிக்கை, புவியை வெப்பம் அடையச்செய்யும் பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்துவதற்கு வகை செய்யும்.

இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளின் பாராளுமன்றங்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புவி வெப்பமயமாதலுக்கு 55 சதவீதம் காரணம் என கை நீட்டி குற்றம் சாட்டப்படுகிற 55 நாடுகளின் பாராளுமன்றங்கள் ஒப்புதல் அளித்த 30 நாளில் இந்த உடன்படிக்கை அமலுக்கு வரும்.

இந்த கூட்டத்தின்போது, நீண்ட காலமாக பணக்கார நாடுகள் தொழிலில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் ஏழை நாடுகளின் தோளில் சுமத்த முடியாது என்ற நிலைப்பாட்டை இந்தியா கட்டிக்காத்தது குறிப்பிடத்தக்கது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்