GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - இந்தியா எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு மத்திய அரசு இசைவு | 14-Oct-2016 19:08

எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் குறிப்பாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்து இருப்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இதனால் செலவு அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த எத்தனாலை பெட்ரோலில் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதே போல‌ ஜம்முவில் ஐஐஎம் தொடங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக ஆங் சான் சூச்சி இந்தியா வருகை | 14-Oct-2016 19:06

பிரிக்ஸ் மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி 16-ஆம் தேதி இந்தியா வருகிறார். கோவாவில் 16-ஆம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி கலந்து கொள்கிறார். 4 நாட்கள் அரசுமுறை பயணமாக வரும் 16-ஆம் தேதி இந்தியா வரும் ஆங் சான் சூச்சி, அக்டோபர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கு பின், தில்லி வரும் அவர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுகிறார்.இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளின் நட்புறவு மேம்படும் வகையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போபாலில் போர் வீரர்கள் நினைவிடம் | 14-Oct-2016 18:58

நாட்டுக்காகப் போரிட்டு தங்களது இன்னுயிரை நீத்த ராணுவ வீரர்களைக்கெ ளரவிக்கும் வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தை பிரதமர் நரேந்திர திறந்து வைக்கிறார்.போபாலில் 12.67 ஏக்கர் பரப்பளவில், ரூ.41 கோடி செலவில் போர் வீரர்கள் நினைவிடம் (செளர்ய ஸ்மாரக்) கட்டப்பட்டுள்ளது. மாநில அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி, வரும் வெள்ளிக்கிழமை திறந்துவைக்க உள்ளார்.இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகியோருக்கு முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அழைப்பு விடுத்துள்ளார்.நாட்டுக்காகப் போராடி தங்களது இன்னுயிரையும் நீத்த ராணுவ வீரர்களைக் கெளரவிக்கவும், பொது மக்களிடையே தேசப்பற்றை அதிகரிக்கச் செய்யவும் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே இதுபோன்ற ஒரு நினைவிடம் கட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றார் அவர்.இந்த நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், அப்போதைய ராணுவ தலைமை அதிகாரி தீபக் கபூர் ஆகியோர் தலைமையில் கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் இல. கணேசன் | 14-Oct-2016 18:54

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கான மாநிலங்களை உறுப்பினராக தமிழக பாஜக மூத்த தலைவவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அதிகாரப்பூர்வமாக மாநிலங்களை உறுப்பினராக இல. கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இல. கணேசன் விரைவில் இடம்பெறுவார் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி மெட்ரோ ரயிலில் இன்று முதல் இலவச வை-பை வசதி தொடக்கம் | 14-Oct-2016 18:53

தில்லி மெட்ரோ ரயிலில் இன்று முதல் இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை தலைவர் டாக்டர். மாங்கு சிங், சிவாஜி மெட்ரோ நிலைய அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் \"Oui DMRC\" என்ற இந்த இலவச வை-பை வசதியை இன்று முதல் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையத்திலும் இலவச வை-பை வசதி விரைவில் கொண்டுவர தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த இலவச வைபை வசதி எம்.எஸ் டெக்னோ சாட் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் தில்லி மெட்ரோ ரயில் சேவை ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தினுள் செல்லும் மக்கள் இலவச வை-பை வசதி மூலம் இ-மெயில், பேஸ்புக், கூகுள், விடியோ கலந்துரையாடல் ஆகியவை பயன்படுத்தி கொள்ளலாம். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது முக்கிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வை-பை வசதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க மத்திய அரசு முடிவு | 12-Oct-2016 18:21

இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவி வகித்தபோது, ஐஐஎம் வரைவு மசோதா உருவாக்கப்பட்டது.அந்த மசோதாவில் நாட்டில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிடுவதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. அத்துடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகே ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அம்சமும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் அதிக தன்னாட்சி அதிகாரங்களை ஐஐஎம் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுத்துவிட்டார்.இந்நிலையில், தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் பிரகாஷ் ஜாவடேகர், பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கையை ஏற்று சில திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதன்படி மேற்கொள்ளப்பட்ட மசோதாவில், ஐஐஎம் நிறுவனங்களுக்கு குடியரசுத் தலைவர் சென்று ஆய்வு மேற்கொள்ள வகை செய்யும் அம்சம் நீக்கப்பட்டது.மேலும், ஐஐஎம் நிறுவனங்களுக்கு இயக்குநர்களை நியமிப்பதற்கான கூடுதல் அதிகாரம் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம், ஐஐஎம் நிறுவனங்கள் மீதான மத்திய அரசின் அதிகாரங்கள் தளர்த்தப்பட்டு அவற்றுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரங்கள வழங்கப்பட்டுள்ளன.திருத்தப்பட்ட புதிய மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்