GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - மற்றவை உலக சித்தர்கள் தினம் | 14-Apr-2016 11:53

 

உலக சித்தர்கள் தினமான ஏப்ரல் 14 இந்திய முறை மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

சித்த மருத்துவத்தைத் தந்த சித்தர்களை நினைவுகூரும் நாளாக ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் உலக சித்தர்கள் தினமாக 2009-ம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்களின் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் | 27-Mar-2016 16:36

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு சிறய கிராமத்தில் அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு டாக்டர் அவுல் பகிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான, பணிவான குடும்பத்தில் இருந்து வந்த போதிலும் சமூகத்திற்காக அவர் கொண்டிருந்த தொலை நோக்கு பார்வைக்கான பங்களிப்பு குறையவில்லை. மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வானுர்தி பொறியியலை அவர் சிறப்பு பாடமாக எடுத்துப்படித்தார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி கழகத்தில் டாக்டர் கலாம் அறிவியலாளராக சேர்ந்து பணிப்புரிந்து வந்தார். 1969 ஆம் ஆண்டு டாக்டர் கலாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவர் இந்தியாவின் முதல் செயற்கைகோள் செலுத்து வாகனத்திற்கான திட்ட இயக்குனராக பணிப்புரிந்தார். ஜூலை மாதம் 1980 ஆம் ஆண்டு ரோகினி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

     அறிவியல் உலகத்திற்கு டாக்டர் கலாமின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அவர் எப்போதுமே தனது சாதனைகள் குறித்து பெருமைபட்டுக் கொண்டதில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணிப்புரிந்து செயற்கைக் கோள் செலுத்து வாகன தொழில்நுட்பத்தில் நிபுணராக விளங்கினார். ஒருங்கிணைந்த வழிகாட்டிஏவுகனை வளர்ச்சித் திட்டத்தின் தலைமை நிறுவனராக பொறுப்பேற்ற அவர் உள்நாட்டு வழிகாட்டி ஏவுகனை வளர்ச்சித் திட்டத்தை பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் மேம்படுத்தினார். அக்னி, பிருத்வி ஏவுகனை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்குப் பெறுப்பேற்ற அவர் பல்வேறு நிறுவனத்துடன் இணைந்து மிக முக்கிய தொழில்நுட்ப உள்நாட்டு திறனை உருவாக்கவும் செயலாற்றினார்.

 

     டாக்டர் கலாம் ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி / மேம்பாட்டு துறையின் செயலராகவும் பணியாற்றினார். இந்தியாவின் ஏவுகனை மனிதர் என்று டாக்டா கலாம் அழைக்கப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 

     டாக்டர் அப்துல் கலாம் ஜூலை 2002ல் 11வது குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவிற்கான அவரின் தொலைநோக்குப் பார்வையை இளைஞர்களிடமும் முதியவர்களிடமும் அவர் வாழ்க்கை முழுவதும் ஆர்வத்துடன் பகிர்ந்துக் கொண்டார். சமுகத்தை தொழில்நுட்பம் மூலமாக மாற்றி அமைப்பதில் டாக்டர் கலாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மனித நலனுக்காக இந்தியாவின் இளைஞர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஊக்குவித்தார்.

 

     டாக்டர் கலாம் அவர் படைத்த சாதனைகளையும் மீறி அனைவரும் தன்னை ஒரு ஆசிரியராகவே நினைவுக்கூற வேண்டும் என்று விரும்பினார். இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஜூலை 27, 2015 ஆசிரியராக அவர் உரையாற்றிய போதே அவர் உயிர் பிரிந்தது.

வெறுமையான சிகரெட் பெட்டிகள்: பிரான்ஸ் ஆணை | 24-Mar-2016 19:20 நிறுவனங்களின் முத்திரைகளோ, வேறுபட்ட நிறங்களோ இல்லாத பெட்டிகளில் மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசாணையை பிரான்ஸ் அரசு பிறப்பித்தது. பெட்டிகளின் அழகால் புகைப் பிடிப்போர் கவரப்படுவதைத் தவிர்க்கவும், புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கவும் இந்த உத்தரவை பிரான்ஸ் அரசு பிறப்பித்துள்ளது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக \"ஜப்பான் டொபாக்கோ இன்டர்நேஷனல்\' நிறுவனத்தின் பிரான்ஸ் பிரிவு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, நிறுவனங்களின் காப்புரிமைக்கு எதிரானது என அந்த நிறுவனம் தெரிவித்தது. காசநோயால் அதிகம் பாதிக்கப்படும் நாடு இந்தியா: ஆண்டுக்கு 2.70 லட்சம் பேர் இறப்பதாக அதிர்ச்சி தகவல் | 24-Mar-2016 18:25

இன்று (மார்ச் 24-ம் தேதி) உலக காசநோய் தினம்

இன்று காசநோய் தினம் அனுசரிக் கப்படுகிறது. உலகிலேயே காச நோய் பாதிப்பு அதிகம் கொண்ட இந்தியாவில் ஆண்டுதோறும் இந்நோய் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காசநோய் மனிதனை மிகவும் விரைவாகத் தாக்கி உயிரை பறித்து விடுகிறது. அதனால், ஆண்டு தோறும் நோயாளிகளில் பலரும் இறக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நம் நாட்டின் காசநோய் தடுப்பு திட்ட நடை முறைகளை மாதிரியாக ஏற்று தீவிரமாக பணிகளை செய்து வந்தா லும், அதிகமான காசநோய் பாதிப்பு களைக் கொண்ட நாடுகளிலேயே இந்தியாவும் முக்கியமான இடத்தில் இருப்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.

இதுகுறித்து அமெரிக்காவின் நூரிஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து காசநோயாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊட்டச் சத்து பற்றி ஆய்வு மேற் கொண்டுள்ள மீரா பவுண்டேஷன் இயக்குநர் மதுரையைச் சேர்ந்த ராஜா முகமது கூறியதாவது:

தொடர்ந்து இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோய் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற தகவல்கள் அரசு மற்றும் அமைப்புகள், ஊடகங்கள் வழியாக கிடைக்கப்பெற்றாலும், மேற்கண்ட அறிகுறிகள் உள்ள வர்கள் சிகிச்சைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். காசநோய் உள்ள வர்களை சமூகம் ஒதுக்கிப் பார்க்கும் நிலை இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

இதனாலேயே நிறைய நோயாளிகள் சிகிச்சை பெற தயங்கி நோய் முற்றிய நிலைக்கு வந்த பின்பு உயிரை இழக்கின்றார்கள். காசநோயானது காற்று மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. இதில் வயது வித்தி யாசம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் பரவுகிறது. இந்த விஷயத்தை இன்னும் தீவிரமாக மக்களிடம் எடுத்துச் சொல்லும்படியான திட்ட உத்திகள் நிறைய தேவைப்படுகின்றன. காச நோயைக் குணமாக்குவதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருமே தெளிவற்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறார்கள்.

நோயாளிகள் 6 மாதங்கள் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

காசநோய் வராமல் தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை கள் இல்லை. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காச நோய் கிருமிகள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும். ஆனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் நபர்களைத்தான் காசநோயாளியாக மாற்றும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காசநோய்த் தொற்று மிக எளிதான பாதிப்புகளை உண்டாக்கும். எச்ஐவி தொற்றுள்ள நபர்கள் மிக வும் எதிர்ப்பு சக்தி குறைவானவர் களாக இருப்பார்கள்.

எனவே, 3 எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் இறப்பில் 1 நபர் காசநோயினால் பாதிக்கப்பட்டவராகவும் இருக் கிறார். இந்தியாவில் ஓர் ஆண்டில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

காணாமல் போகும் 30 லட்சம் நோயாளிகள்

ராஜா முகமது கூறும்போது, ‘‘உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காசநோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர். ஆனால், தற்போது 1 லட்சம் பேருக்கு 211 நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர்.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள். இவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்கு காசநோயை பரப்புகின்றனர். சிகிச்சைக்கு வராதவர்களை இலக்கு வைத்து பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன” என்றார்.

காசநோய் தடுப்புக்கு புதிய மருந்து அறிமுகம் | 22-Mar-2016 18:29 காசநோய் தடுப்புக்கான \"பெடாகிலைன்\' என்ற புதிய மருந்தை மத்திய அரசு திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. வரும் 24ஆம் தேதி (வியாழக்கிழமை) உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இந்த மருந்தை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: கடந்த ஆண்டு வரை, நாடு முழுவதும் 125 காசநோய் சிகிச்சை மையங்கள் மட்டுமே இயங்கி வந்தன. அவை அனைத்தும் காசநோயைக் கண்டறிவதற்கு பரவலாக்கப்பட்ட சோதனை முறைகளையே கையாண்டன.  தற்போது, 500 காசநோய் சிகிச்சை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காசநோய் அறிகுறிகளைத் துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிய முடியும். இந்தியாவில் காசநோய் பாதிப்பை எதிர்த்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றார் ஜே.பி.நட்டா.  சித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த உலக சுகாதார நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் | 20-Mar-2016 19:12 இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி, நேச்சுரோபதி ஆகியவற்றை உலகம் முழுவதும் பிரபலமாக்க மத்திய அரசு விரைவில் உலக சுகாதார மையத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது. இதுதவிர, கேன்சரை குணப்படுத்த இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளை பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதுபற்றி ஆயுஷ் மந்திரி ஸ்ரீபத் யெசோ நாயக் கூறுகையில், ஆயுஷ் என்பது மிக முக்கியமான ஒரு துறை. இதை உலகம் முழுவதும் நாம் பிரபலமாக்க வேண்டும். இதற்காக, உலக சுகாதார மையம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் நடந்த தேசிய ஆரோக்கிய கண்காட்சியை துவங்கி வைத்து இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சியில் ஹெல்த் இன்சூரன்ஸ், மருத்துவ சுற்றுலா, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆய்வக கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நேச்சுரோபதி மையங்கள் ஆகியவை கலந்து கொண்டன.


QUIZ

தற்போதைய நிகழ்வுகள்