GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - அரசியல் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க தற்காப்புக்காக தாக்குதலில் ஈடுபடலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | 20-Jun-2016 19:55

தன்னை மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படும் போதும் அவர்களைப் பாதுகாக்க சட்டத்தை ஒருவர் தன் கையில் எடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரு நபர்களின் மேல்முறையீட்டு வழக்கில் இந்த முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மீது, அண்டை வீட்டார் மற்றும் சிலரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. தங்களது பெற்றோரைத் தாக்கியவர் கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வர்கள் வாதிட்டனர். ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த விசாரணை நீதிமன்றம் அவர்களைக் குற்ற வாளிகள் எனக் கூறி தீர்ப்பளித்தது.

மேல்முறையீட்டில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையையும் உறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கீர்த்தி சிங் ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தங்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறவுகள் தாக்கப் படும்போது அவர்களைப் பாதுகாக்க சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது தவறில்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இவ்வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மற்றவர்களைத் தாக்கியிருப்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஏன் தாக்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள் என்பதையோ, அவர்களின் உடலில் இருக்கும் ஏராளமான தழும்புகளுக்கான காரணங்களையோ விவரிக்க காவல் துறை தரப்பு தவறிவிட்டது. தங்களின் பெற்றோர் தாக்கப்பட்டதை அவர்கள் பார்த்ததால்தான் அவர்கள் இருவரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். அவர்களைப் பாதுகாக்க முயன்ற தால்தான் இருவரின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான, கூர்மையான ஆயுதங்களால் அவர்களின் பெற்றோர் தாக்கப்பட்டுள்ளனர்.அத னால், அவர்களின் தந்தை உயிரிழந்துள்ளார். தங்களின் பெற்றோர் தாக்கப்படுவதைப் பார்த்த இந்த மனுதாரர்களுக்கு பதில் தாக்குதல் நடத்த சட்டப்படி உரிமை உள்ளது. ஏன் இவர்கள் இருவருக்கும் தண் டனை அளிக்கப்படுகிறது என்பதை விசாரணை நீதிமன்றம் தெரிவிக்க வில்லை. சம்பவத்தின் மூல கார ணத்தை அரசு தரப்பு ஆராயவில்லை” எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்தனர்.

அண்மையில் ஹரியாணா காவல் துறை தலைவர் (டிஜிபி) கே.பி. சிங், “ஒரு பெண் பலாத் காரம் செய்யப்படுவதைப் பார்க் கும்போதோ அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சிப்பதைப் பார்க்கும்போதோ, அவர்களைப் பாதுகாக்கும்பொருட்டு சாதாரண மனிதன் குற்றவாளியைக் கொலை செய்யக்கூட உரிமை உள்ளது” எனத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

பயிர்களை அழிக்கும் விலங்குகளை கொல்ல தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | 20-Jun-2016 19:24

பயிர்கள் மற்றும் தாவரங்களுக்கு சேதங்களை விளைவிக்கும் காட்டு விலங்குகளை கொல்ல அனுமதிக்கும் மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. பீகார், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பயிர்களையும், தாவரங்களையும் பாதுகாக்க அவற்றை தின்று அழிக்கும் காட்டெருமைகள், மான்கள், குரங்குகள் போன்ற வனவிலங்குகளை கொல்ல அனுமதித்து அண்மையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மத்திய அரசின் மேற்கண்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை அணுகி முடிவை அறியுமாறு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், விசாரணையை ஜூலை மாதம் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.     தாவரங்களுக்கு சேதம் விளைவிக்கின்றன என்பதற்காக விலங்குகளை கொல்ல அனுமதிப்பது சரியான முடிவு அல்ல என்பது விலஙகின ஆர்வலர்களின் வாதமாகும். மேலும் 3 மாநிலங்களிலும் எந்த ஆ்வும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம், வன விலங்குகளை கொல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அண்மையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கும், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே மோதல் மூண்டது குறிப்பிடத்தக்கது.  அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற மெக்சிகோ ஆதரவளிக்கும்: மெக்சிகோ அதிபர் உறுதி | 09-Jun-2016 12:17

5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது வெளிநாட்டு பயணத்தின் இறுதி கட்டமாக மெக்சிகோ சென்றடைந்தார். அவருக்கு  \'பாரத் மாதா கி ஜெய்\' என கூறி  மெக்சிகோவில் சிகப்பு கம்பள வரவேற்பளித்தனர்.

மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோவும், பிரதமர் மோடியும் சந்தித்துப் பேசினர். அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற மெக்சிகோ ஆதரவளிக்கும் என நீட்டோ உறுதியளித்தார். இதேபோன்று, விண்வெளி, அறிவியல், தொழில்நுட்ப துறைகளின் ஆய்வில் மெக்சிகோவுக்கு இந்தியா துணைபுரியும் என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.

அசாமில் பாரதீய ஜனதா வரலாறு படைத்தது, கேரளாவிலும் தாமரை மலர்ந்தது! | 22-May-2016 14:43   புதுடெல்லி,   அசாமில் பாரதீய ஜனதா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி வெற்று உள்ளது. கேரளாவிலும் தாமரை மலர்ந்து உள்ளது.   அசாமில் 126 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றிஉள்ளது. பாரதீய ஜனதா கூட்டணி 87 தொகுதிகளை வசப்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா தனிக்கட்சியாக 28 தொகுதிகளில் வெற்றி பெற்று 34 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் வரலாற்றில் தேசிய கட்சியான பாரதீய ஜனதா முதல் முறையாக அசாமில் ஆட்சி அமைக்கிறது. கேரளாவிலும் பாரதீய ஜனதா கால்பதித்து உள்ளது.   கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜகோபால் வெற்றி பெற்று உள்ளார். நிமோம் தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு சசிதரூருக்கு கடும் போட்டியை கொடுத்தவர். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக பணியாற்றியவர். அப்போது மத்திய பிரதேச மாநில மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.    பிரதமர் மோடி பெருமிதம்   அசாமில் பெற்றது வரலாற்று வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.      தேர்தல் முடிவுகள் வெளியாகியதை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி மீது மக்கள் தங்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர். அனைத்து துறையிலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை காணச்செய்யும் கட்சியாக பாரதீய ஜனதாவை பார்க்கிறார்கள். அசாமில் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி எல்லாவகையிலும் வரலாற்று சிறப்புமிக்கது, தனிச்சிறப்பானது. இந்த சிறப்பான வெற்றிக்காக அசாம் மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா தொண்டர்கள், தலைவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.   அசாம் மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு பாரதீய ஜனதா கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். அந்த மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில், புதிய உயரங்களை நோக்கி அழைத்து செல்லும். மேற்கு வங்காள மாநிலத்திலும் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டார்கள். அவர்கள் அங்கு மக்களின் பிரச்சினையை தொடர்ந்து எழுப்புவார்கள். கேரளாவில் கட்சி தொடர்ந்து இருந்து வருவதற்கு பலன் கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் மக்களின் வலுவான குரலாக ஆக முடியும்.    கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியை ஒவ்வொரு பத்தாண்டுகளிலும், செங்கல் செங்கலாக வைத்து கட்டமைத்தவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களால்தான் இன்றைக்கு அங்கு இந்த நிலையை பார்க்கிறோம், என்று கூறிஉள்ளார்.    குடியரசுத் தலைவரின் முடிவும் மறுஆய்வுக்கு உட்பட்டதுதான்! உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் | 21-Apr-2016 21:58 குடியரசுத் தலைவரின் முடிவும், நீதித் துறையின் மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடியதுதான் என்று உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் சட்டப் பேரவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ் கலைத்ததை எதிர்த்து பதவியிழந்த முதல்வர் ஹரீஷ் ராவத் தொடுத்த மனுவும், அதுதொடர்பாக தொடுக்கப்பட்ட பிற மனுக்களும், அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், நீதிபதி வி.கே. பிஷ்ட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மனிதர்கள் தவறிழைக்கும் மனோபாவம் கொண்டவர்கள்தான். அது, குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்; நீதிபதிகளுக்கும் பொருந்தும். தன்னிடம் அளிக்கப்பட்ட அறிக்கையின்படி, குடியரசுத் தலைவர் எடுத்த முடிவை, நீதித்துறையால் வெளிப்படையாக மறுஆய்வுக்கு உட்படுத்த முடியும்.  உத்தரகண்ட் சட்டப் பேரவையில் மார்ச் மாதம் 28ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், மாநில நிலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் எப்படி புரிந்து கொள்வது? என்றனர். அப்போது மத்திய அரசு தரப்பில், குடியரசுத் தலைவர் தனக்கு இருக்கும் அரசியல் அனுபவத்தை வைத்தே, உத்தரகண்ட் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை அமல்படுத்துவதென முடிவு செய்தார் எனவும், தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் போலல்லாது குடியரசுத் தலைவர் வேறு கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டுத் தெரிவித்ததாவது: குடியரசுத் தலைவருக்கு உத்தரகண்ட் ஆளுநர் மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று அனுப்பிய அறிக்கையில், 35 எம்எல்ஏக்களும் சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்பிடவில்லை. அப்படியிருக்கையில், 35 எம்எல்ஏக்களும் வாக்கெடுப்பு கோரினர் என்று மத்திய அரசு எப்படி புரிந்து கொண்டது? ஆளுநர் அறிக்கையில் அதுபோல இருந்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது முதல்வர் ஹரீஷ் ராவத் நடவடிக்கை எடுத்த காரணத்தாலேயே, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பினர். மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை: அப்போது ஹரீஷ் ராவத் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி கூறியபோது, வழக்கில் நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிப்பதற்கு முன்போ அல்லது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட காலத்திலோ குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்தார். அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மத்திய அரசு அதுபோல முடிவை எடுத்துள்ளதா? என்பதை உறுதி செய்ய மறுத்தார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், \"நாங்கள் ஆத்திரப்படும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்காது என்று நம்புகிறோம்\' என்று எச்சரிக்கை விடுத்தனர். கோஹினூர் வைரத்தைத் திரும்ப கொண்டு வர இயலாது: மத்திய அரசு | 11-Apr-2016 20:19  

பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தைத் திரும்பக் கொண்டு வர இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்தும், இந்த விவகாரத்தில் பிரிட்டனிடம் இருந்து கிடைத்த பதில் என்ன என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஐ மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவுக்கு மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சகம் அளித்த பதில்:

நீங்கள் திரும்பக் கேட்கும் கோஹினூர் வைரமானது, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் எடுத்துச் செல்லப்பட்ட தொல்லியல் பொருளாகும். தொல்லியல் மற்றும் கலைப் பொருள்கள் பாதுகாப்புச் சட்டம் 1972-இன்படி, சுதந்திரத்துக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்ட பொருள்களைத் திரும்பிக் கொண்டு வர இயலாது.

மேலும் பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் எந்தெந்த தொல்லியல் பொருள்கள் உள்ளன என்பது குறித்து இந்திய தொல்லியல் துறையிடம் எவ்வித பட்டியலும் இல்லை என்று கூறியுள்ளது. முன்னதாக, கோஹினூர் வைரத்தை திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், \"கோஹினூர் வைரத்தை அனைத்து நாடுகளும் கேட்கின்றனர். எத்தனை நாடுகள் கேட்கின்றன என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?\' என்று சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ரஞ்சித் குமார், \"அந்த விவரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்\' என்று கோரினார்.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்