GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - அறிவியல் & தொழில்நுட்பம் நாட்டிலேயே அதிக திறன்வாய்ந்த சிறப்புக் கணினியை ஐ.ஐ.டி கௌஹாத்தி இன்று பெறும். | 21-Sep-2016 16:19 நாட்டிலேயே அதிக திறன்வாய்ந்த சிறப்புக் கணினியை ஐ.ஐ.டி கௌஹாத்தி இன்று பெறும். PARAM ISHAN என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்புக் கணினியை, கௌஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இன்று இயக்கி வைப்பார். Centre for Development of Advanced Computing என்ற மையத்துடன் இணைந்து, ஐ.ஐ.டி கௌஹாத்தி இந்த திறன்மிக்க கணினியை வடிவமைத்துள்ளது. வினாடிக்கு சுமார் 250 டிரில்லியன் புள்ளிகள் என்ற அளவில் செயல்படும் இந்த கணினி, 300 TB அளவிலான தரவுகளை சேமிக்கும் திறன் கொண்டது. இந்த சிறப்பு கணினியினால், ஐ.ஐ.டி கௌஹாத்தி கல்வி நிறுவனத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் பயனடைவார்கள். ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி | 31-Aug-2016 19:16

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில்   ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இயந்திரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றகரமாக சோதனை செய்தனர்.

ராக்கெட் ஏவப்பட்ட 55 விநாடிகளில் சோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறுகையில்,  ராக்கெட் இன்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இதுவாகும்.

இந்த ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி அடைந்ததன் மூலம் இனி ராக்கெட் ஏவுவதற்கான செலவு 10 மடங்கு குறையும். பொதுவாக ராக்கெட்கள் ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை தாங்கிச் செல்லக் கூடியவை. ஆனால் இந்த ராக்கெட் இயந்திரம் வளிமண்டல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு அதன் மூலம் இயங்குவதால், ராக்கெட் எடை குறைவாக, அதே சமயம் திறன் அதிகம் கொண்டதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இத்தகைய ராக்கெட் என்ஜினை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே சோதனை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பால் வீதியில் சூரியனை விட அதிக எடையுள்ள நட்சத்திரம் கண்டுபிடிப்பு | 24-Aug-2016 20:14

சூரியனை விட அதிக எடை யுள்ள நட்சத்திரத்தை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பால் வீதியை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் பலனாக சூரியனை விட அதிக எடை யுள்ள இளம் நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 11 ஆயிரம் ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், சூரியனை விட 30 மடங்கு நிறை கொண்டதாக அந்த இளம் நட்சத்திரம் உள்ளது. இந்த நட்சத்திரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தால், பால் வீதியில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பது தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஏனெனில், அந்த இளம் நட்சத்திரம் தன் பகுதியில் உள்ள மூலக்கூறுகளை எல்லாம் ஈர்த்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அப்படி அந்த இளம் நட்சத்திரம் முழுமை அடையும் போது மிகப்பெரிய நட்சத்திர மாக மாறும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.

நமது பால் வீதியில் உள்ள பெரும்பாலான இளம் நட்சத் திரங்கள் மிக விரைவாக வளர்ந்து குறைந்த காலத்தி லேயே எரிந்து ஒன்றுமில்லாமல் போய் விடும். எனவே, அவற்றை ஆய்வு செய்வது மிகவும் கடினம். இந்த நட்சத்திரம் தொடர் பான ஆய்வு கட்டுரை, ‘ராயல் ஆஸ்டிரோனாமிக்கல் சொசைட்டி’ மாத இதழில் வெளியாகி உள்ளது.

சந்திரயான் – இரண்டு விண்கலம் 2017 இறுதியில், தனது ஆய்வைத் தொடங்கும். | 22-Aug-2016 16:05

சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான் – இரண்டு விண்கலம் 2017 இறுதியில் தனது ஆய்வைத் தொடங்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் திரு. மயில்சாமி அண்ணாதுரை கூறியிருக்கிறார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பப்பட்ட சந்திரயான் ஒன்று விண்கலம், தனது ஆய்வை முடித்து விட்டது என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், அனுப்பப்பட உள்ள சந்திரயான் இரண்டு விண்கலம், அங்குள்ள கற்கள், மண் ஆகியவற்றை பரிசோதித்து தகவல்களை அனுப்பும் என்று கூறினார். இதற்காக, சந்திரயான் இரண்டு விண்கலத்தில் சிறிய வேதியியல் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சூரியன் குறித்து ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்தப் பனிகள் முடிவடையும் என்றும் திரு. அண்ணாதுரை கூறினார்.

காற்றில் இருந்து சுத்தமான குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் | 11-Aug-2016 18:13 காற்றில் இருந்து சுத்தமான குடிநீரை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி ஐதராபாத் மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். 22 வயதே ஆன ஜவ்வாது பட்டேல் என்ற பொறியியல் மாணவரின் இந்த கண்டுபிடிப்பு ஒரு மணி நேரத்தில் 2 லிட்டர் சுத்தமான குடிநீரை வெறும் காற்றில் இருந்து தயாரிக்கிறது.  பெல்டியர் விதிகளின் படி தெர்மோ டைனமிக்ஸ் அடிப்படையில் இந்த இயந்திரத்தை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். காற்றில் இருந்து நீரை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இயந்திரம் குடிக்க தகுதியான சுத்திகரிக்கப்பட்ட நீரை தருகிறது என்பது சிறப்பு அம்சம்.  அத்துடன் மின்தேவையின்றி சூரிய சக்தியால் இயங்கும் வகையில் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடல் திட்டத்தின் கீழ் இந்த இயந்திரத்தை வர்த்தக ரீதியாக மாற்ற ஜவ்வாது பட்டேல் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.  வியாழன் கிரகத்தை முதல்முறையாக படம் பிடித்து அனுப்பியது ஜுனோ: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி | 15-Jul-2016 09:00 நாசாவின் ஜுனோ விண்கலம், வியாழன் கிரகத்தின் 3 நிலவுகளை முதல்முறையாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வியாழன் கிரகத்தை ஆராய் வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011, ஆகஸ்டில் கேப்கனா வெரலில் இருந்து ஜுனோ விண்கலத்தை செலுத்தியது. இந்த விண்கலம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயணித்து, கடந்த 4-ம் தேதி வியாழனை அடைந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த உயர் திறன் கொண்ட கேமரா மூலம் 43 லட்சம் கி.மீ தொலைவில் இருந்தபடி வியாழனை ஜுனோ படம்பிடித்துள்ளது.

அந்த படத்தில் வியாழன் கிரகத்தை சுற்றும் நான்கு நிலவுகளில், லோ, ஐரோப்பா மற்றும் கனிமெட் ஆகிய 3 நிலவுகளின் படமும், வியாழனின் மையத்தில் உள்ள சிவந்த புள்ளியும் தெளிவாக பதிவாகியுள்ளது.

வியாழனின் சுற்றுவட்டப் பாதையின் தூரம் குறைய, குறைய தொடர்ந்து படங்களை எடுக்கும் என்று ஜுனோ திட்ட ஆய்வாளர் கேண்டி ஹன்சென் தெரிவிக்கிறார். மேலும் அவர், அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி வியாழனை மிக அருகில் நெருங்கியதும், அதன் முதல் உயர் திறன் படத்தை ஜுனோ படம்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜுனோ பூமிக்கு அனுப்பி வைத்த படங்களை எல்லாம் இணையதளம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கவும் நாசா குழு திட்டமிட்டுள்ளது.

வியாழனின் மேக உச்சியை நெருங்குவதற்காக ஜுனோ விண்கலம் தொடர்ந்து 37 முறை அதன் சுற்றுவட்ட பாதையை வட்ட மடித்து தூரத்தை குறைக்கும் என்றும், அப்போது வியாழனில் இருந்து 4,100 கி.மீ தொலைவில் ஜுனோ நிலை கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.
QUIZ

தற்போதைய நிகழ்வுகள்