GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - விளையாட்டு ஐசிசி தரவரிசை பட்டியல்: அஸ்வின் 'நம்பர் 1' | 12-Oct-2016 18:31

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஸ்வின் மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றிருந்தார். தற்சமயம் அவர் 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த போட்டித் தொடர் துவங்குவதற்கு முன்பு தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்த அஸ்வின், இந்த வெற்றியின் காரணமாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி, 900 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை புஜாரா 14-ஆவது இடத்திலும், விராத் கோலி 16-ஆவதுஇடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களை பொறுத்தத வரை இந்தியாவை ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

டெஸ்ட் தரவரிசை: இந்தியா முதலிடம்! | 12-Oct-2016 18:30

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் முந்தைய 2 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, 3-ஆவது போட்டியின் வெற்றி மூலமாக தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனை படைத்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதை அடுத்து, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 115 புள்ளிகளுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. இந்திய அணியை முதலிடத்துக்கு வழிநடத்திச் சென்ற கேப்டன் கோலிக்கு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருதை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வழங்கினார்.

\"டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருதை பெறுவது கெளரவமான தருணமாகும். அணியின் செயல்பாட்டுக்கு ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியமானதாகும். அணி வீரர்களிடையே நல்லுறவு இருப்பதும், இக்கட்டான தருணங்களில் கைகொடுப்பதுமே இத்தகைய நிலைக்கு அணியை உயர்த்தியுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\' என்று கேப்டன் கோலி கூறினார்.

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டியில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா | 21-Sep-2016 16:29

டிராக் ஆசியக் கோப்பை சைக்கிள் போட்டிகள் 2016, நேற்று புதுதில்லியில் தொடங்கியது. தொடக்க நாளன்று, இந்தியா, மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

Velodrome எனப்படும் உள் விளையாட்டரங்கு விரைவு சைக்கிள் போட்டியில், இந்தியாவின் Deborah Herold தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் Deborah Herold மற்றும் Kezia Vergheese அடங்கிய இந்திய அணி, கஸகிஸ்தான் அணியைத் தோற்கடித்து தங்கம் வென்றது. ஜூனியர் பிரிவில், இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

முதன் முதலாக, சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் Alena Reji, வெள்ளிப் பதக்கம் வென்றார். 3 கி.மீ. போட்டியில் தமக்கு எதிராக போட்டியிடுபவர் போட்டியில் இருந்து விலகியதால், ராஜ்குமாரி தேவிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ISSF ஜூனியர் உலக்கோப்பை: இந்தியா, 6 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களுடன் 2—வது இடத்தில் உள்ளது. | 21-Sep-2016 16:28 ISSF ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடல் போட்டியில், 25 மீட்டர் ராபிட் ஃபையர் பிஸ்டல் பிரிவில்,  இந்தியாவின் RUSHIRAJ BAROT , தங்கம் வென்றார். இந்தியா இதுவரை, 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா, 21 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய ஆடவர் அணி, தங்கம் வென்றது.  5 மீட்டர் பிஸ்டல் பிரிவில், இந்திய ஜூனியர் ஆடவர் அணி, வௌ¢ளிப்பதக்கம் பெற்றது. ஜூனியர் மகளிர் பிரிவில், 10 மீட்டர் ஏர் ரைஃபிள்  போட்டியில்,  இந்திய அணி, வெண்கல பதக்கம் வென்றது. சர்வதேச துப்பாக்கி சுடுதலில் மதுரை மாணவர்கள் சாதனை | 21-Sep-2016 15:59

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அஜர்பைசானின் கபாலா நகரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் சர்வதேச துப்பாக்கிக் சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் வீரர்கள் பங்கேற்றனர். இதில் 50 மீட்டர் புரோன் ரைபிள் பிரிவில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர் அஜய் நிதீஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதே பிரிவில் மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலைக்கல்லூரி மாணவர் சர்வேஜ் சொருத் சங்கர் வெண்கலம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற இருவரும் நாளை மதுரைக்கு வருகின்றனர். பதக்கம் வென்ற வீரர் களுக்கு அவர்களது கல்வி நிறுவ னங்கள், பாராட்டு தெரிவித்துள்ளன.

பாராலிம்பிக் நிறைவு விழா: தேசிய கொடி ஏந்திச் சென்றார் மாரியப்பன் | 21-Sep-2016 15:57

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளை யாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 11 நாட்கள் நடந்த இந்த விளை யாட்டு திருவிழாவின் நிறைவு விழா நிகழ்ச்சிகள், வரலாற்று சிறப்பு மிக்க மரக்கானா ஸ்டேடியத்தில், வண்ணமயமான வாண வேடிக் கைகளுடன் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடை பெற்றது.

பல்வேறு நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக, சைக்கிள் பந்தயத்தின்போது உயிரிழந்த ஈரான் வீரர் பஹ்மன் கோல்பர் நிஷாத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு கைகளும் இல்லாதவரான பிரேசிலை சேர்ந்த ஜோனதன் பாஸ்டோஸ், கால்களால் கிதார் இசைத்து அசத்தினார். தொடர்ந்து கேபி அமர்டான்ஸ், பெர்ணாண்டஸ், வன்சியா டி மட்டா உள்ளிட்டோரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றவரான சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கொடி அணிவகுப்பின் போது, இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றார். 2020 பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இதையொட்டி ரியோ நகர மேயர் எடுரடோ பயஸ், பாராலிம்பிக் கொடியை சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் கிராவனிடம் ஒப்படைத்தார். அவர் அதனை டோக்கியோ நகர கவர்னர் யூரிகோ கொய்கியிடம் ஒப்படைத்தார்.

இதன்பின் ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜப்பானின் பிரபல மாடலான ஜிமிகோ மேடையில் தோன்றி, இடது காலை இழந்தவரும், தொழில்முறை நடன கலைஞரு மான கோச்சி ஒமியை அறிமுகப் படுத்தினார். பின்னர் அவர் நடனம் ஆடி பார்வையாளர்களை அசத்தினார். தவிர, ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா போல பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவுவிழாவும் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் கோலாகல மாக நிறைவடைந்தது.

107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது. இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்துள்ளது.




QUIZ

தற்போதைய நிகழ்வுகள்