GK & Current Affairs in Tamil!

QUIZ

நடப்பு செய்திகள் - தமிழ்நாடு கூடங்குளம் 2வது அணு உலையில் மின்னுற்பத்தி தொடங்குகிறது | 14-Oct-2016 19:37

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.

கூடங்குளம் 2வது அணு உலையில் இன்றிரவு அல்லது நாளை காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணு உலை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செப்டம்பர் 6ம் தேதி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் உட்பட 6 முதல் 10 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளது—-ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக். | 21-Sep-2016 16:33 ஆயுர்வேதம், சித்தா, யோகா உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக ஆயுஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் உட்பட ஆறு முதல் 10 மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுஷுக்கென தனிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை புதுதில்லியில் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகவும் இரண்டு மாதங்களுக்குள் இப்பணிகள் முடிவடைந்து திறக்கப்படும் என்று கூறினார். அலோபதி, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மூலம் சுகாதார சேவை வழங்க தேசிய அளவில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் செயல்படுத்த திட்டமிட்டு, நாடு முழுவதும் 10 மாவட்டங்களை தேர்வு செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் பெரிய சூரிய மின் சக்தி நிலையம்: தேசத்திற்கு அர்ப்பணிப்பு! | 21-Sep-2016 15:19

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள, அதானி குழுமத்திற்கு சொந்தமான 648  மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஒரே இடத்தில் அமைந்துள்ள  648  மெகா வாட் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவக்கம் | 13-Sep-2016 18:51

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. \"சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெக்சிகோ துணைத்தூதரகம் இந்தியா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

மேலும் தென்னிந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் வியாபாரம் நிமித்தமாக மெக்சிகோ செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் உதவும்.\"என இந்தியாவிற்கான மெக்சிகோ தூதர் மெல்பா பிரியா தெரிவித்துள்ளார். 

சென்னை நீலாங்கரையில் திறக்கப்பட்டுள்ள இந்த தூதகரத்தின் மூலமாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். எனினும் இந்த தூதரகத்தில் மெக்சிகோ செல்வதற்கான விசா வழங்கப்படாது. 

மெக்சிகோ செல்ல விசா பெற விரும்புவோர் தில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகத்தை அணுக வேண்டும். மெக்சிகோ சார்பில் இந்தியாவில் அமைக்கப்படும் நான்காவது தூதரகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேசிய விருது: சேலம் நிறுவனத்துக்கு முதல் பரிசு | 05-Sep-2016 15:09

மத்திய அரசின் 2013 மற்றும் 2014-ம் ஆண்டுக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான (எம்எஸ்எம்இ) தேசிய விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்துக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட் டுள்ளது.

தற்போது 2013 மற்றும் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நிறுவனங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

விருதுகளை செப்டம்பர் மாதம் லூதியானாவில் நடை பெற உள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். மொத்தம் 70 விருதுகளை அளிக்க உள்ளார்.

2014-ம் ஆண்டின் தரமான உற்பத்திக்கான விருதுக்கு மசாலா பொடிகள் தயாரிக்கும் ஈரோட்டை சேர்ந்த ஈட்மேன் புட்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த தொழில்முனைவுக்கான 2013-ம் ஆண்டு தேசிய விருதின் இரண்டாவது பரிசு தமிழகத்தின் கரூரை சேர்ந்த மஞ்சு எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற உள்ளது.

கயிறு உற்பத்தியில் சிறந்த பெண் தொழில்முனைவோருக் கான விருது வாடிப்பட்டியை சேர்ந்த கேடிஎஸ் காயர் பார்ம்ஸ் உரிமையாளர் எஸ்.கவிதாவுக் கும், சிறந்த இளம், கயிறு தொழில் முனைவோர் விருது பொள்ளாச்சி எஸ்.எஸ்.எஸ்குளோபல் உரிமையாளர் கே.சுரேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்த திட்டம். | 31-Aug-2016 20:18 தமிழகம் முழுவதும் பாரம்பரிய உணவு திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் திருமதி. சரோஜா தெரிவித்துள்ளார். சேலத்தில் இத்தகைய திருவிழாவை நேற்று தொடங்கி வைத்து அவர் பேசினார். சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 140 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் திருமதி. சரோஜா கூறினார்.


QUIZ

தற்போதைய நிகழ்வுகள்