GK & Current Affairs in Tamil!

QUIZ

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது மாலத்தீவு | 14-Oct-2016 19:11

காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வியாழக்கிழமை வெளியேறியது. அந்நாட்டின் மீது அபராதம் விதிப்பதாக காமன்வெல்த் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மாலத்தீவு அரசு இந்த முடிவு எடுத்தது. மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது கடந்த 2012-ஆண்டு பதவி விலகியதை அடுத்து, அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும், நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் காமன்வெல்த் அமைப்பு குற்றம் சாட்டி வந்தது.இந்நிலையில், கடந்த மாதம் கூடிய காமன்வெல்த் கூட்டமைப்பின் செயற்குழு, மாலத்தீவில் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டியது. மேலும், தங்கள் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவை இடைநீக்கம் செய்யப்போவதாக காமன்வெல்த் எச்சரிக்கை விடுத்திருதது.இந்நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக மாலத்தீவு வியாழக்கிழமை அறிவித்தது. இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:முகமது நஷீத் பதவி விலகிய பிறகு, அரசமைப்புச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், அரசுக்கு எதிராக காமன்வெல்த் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க முயன்றது. மேலும், மாலத்தீவுக்கு காமன்வெல்த் நடவடிக்கைக் குழு அபராதம் விதிக்க முயன்றதை ஏற்றுக்கொள்ளவே மடியாது.எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக கடினமான முடிவை மேற்கொள்ள நேரிட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

QUIZ

தற்போதைய நிகழ்வுகள்