GK & Current Affairs in Tamil!

QUIZ

தாய்லாந்து மன்னர் அதுல்யதேஜ் காலமானார் | 14-Oct-2016 19:13

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (88) வியாழக்கிழமை காலமானார். சக்ரி அரச வம்சத்தில் 9-ஆவது மன்னரான அவர் ஒன்பதாவது ராமா என்றும் அறியப்பட்டார். உலகில் மிக நீண்ட காலம் மன்னராட்சிபுரிந்து வந்தவர் என்ற பெருமைக்குரியவராக அவர் திகழ்ந்தார். மன்னராக இருந்த அவரது சகோதரர் 1946-இல் காலமானதைத் தொடர்ந்து, பூமிபால் அதுல்யதேஜ் அரியணையேறி, 70 ஆண்டு காலம் அனைத்துத் தரப்பினரும் போற்றும் மன்னராகத் திகழ்ந்தார்.உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை அவர் காலமானார். அரசரைக் கடவுளுக்கு நிகராகக் கருதும் தாய்லாந்தில் அவரது மரணச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வெளியே கடந்த சில நாட்களாக ஏராளமான பொதுமக்கள் கூடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வந்தனர்.அவர் காலமானதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசர் மஹா வஜ்ரலாங்கரணுக்கு (64) முடிசூட்டப்படும் என்று பிரதமர் பிரயுத் சன்-ஒசா கூறினார்.

QUIZ

தற்போதைய நிகழ்வுகள்