GK & Current Affairs in Tamil!

QUIZ

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் நியமனம் | 14-Oct-2016 19:17

போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அண்டோனியோ குட்டெரெஸ் (67), ஐ.நா.சபையின் பொதுச் செயலராக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். ஐ.நா. சபையின் பொதுச் செயலரான பான்-கீ-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு (2017) ஜனவரி 1-ஆம் தேதி ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக குட்டெரெஸ் பதவியேற்பார்.முன்னதாக, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 15 நாடுகள், பொதுச் செயலர் பதவிக்கு குட்டெரெஸை ஒரு மனதாக தேர்வு செய்து, 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபைக்கு அவரது பெயரை கடந்த வாரம் பரிந்துரைத்தது. அதன்படி, குட்டெரெஸை பொதுச் செயலராக நியமிக்க 193 நாடுகளும் வியாழக்கிழமை இசைவு தெரிவித்தன.இதன்மூலம், அந்தப் பதவிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் பிரதமராக கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை குட்டெரெஸ் பதவி வகித்தார். அதன்பிறகு, 2005-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அகதிகளுக்கான ஐ.நா. தூதராக அவர் சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

QUIZ

தற்போதைய நிகழ்வுகள்